........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-97

இடதுகைப் பழக்கம் ஏன்?

 • பாதிரி எனும் மலர் நடுப்பகலில் மலரும் இயல்புடையது.

 • உருது எனும் மொழி வடமிருந்து இடமாக எழுதப்படும் மொழி.

 • யோகா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள்.

 • பிக்கா போலன்சியா எனும் நோய் போலந்து நாட்டைத் தவிர வேறு எங்குமில்லை.

 • பெல்ஜியத்தில்தான் மிக நீளமான சாலைகள் அதிகம் உள்ளன.

 • போலந்து சாடாரிட்டி எனும் தொழிற்சங்கம்தான் உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம்.

 • தலைமுடி ஏற்றுமதி செய்வதில் சீனா முதலிடம் வகிக்கிறது.

 • மூளையில் வலது பக்கம் அதிக சக்தியை பெற்றிருப்பவர்கள் இடது கைப் பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர்.

 • குளிர்ந்த காற்றும் வெப்பக் காற்றும் சந்திப்பதால் இயற்கையான புயல் உருவாகிறது.

 • கொய்ணா எனும் மருந்து மலேரியா நோயைக் குணப்படுத்துகிறது.

 • நெளரு குடியரசுதான் உலகின் மிகச்சிறிய குடியரசு நாடாகும்.

 • இந்திய ரிசர்வ் வங்கி 1935ல் ஆரம்பிக்கப்பட்டது.

 • கடல் நீரில் 2.30 சதவிகிதம் அளவு உப்புள்ளது.

 • டாக்டர் ஆம்ரூஸ் பாரே என்பவர்தான் அறுவைசிகிச்சையில் தையல் முறையை கண்டுபிடித்தார்.

 • இடி மின்னல் நாடு என்று பூட்டான் நாட்டைக் குறிப்பிடுகின்றனர்.

 • வெளிச்சக்கதிர்கள் 1ஆண்டு காலத்தில் பயணப்படும் வேகத்தைக் குறிப்பது ஒளி ஆண்டு எனப்படும்.

 • சிகாகோவின் புனைப்பெயர் புயலடிக்கும் நகரம்.

 • தக்காண பீடபூமி முக்கோண வடிவம் உடையது.

-கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.