........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-98

வாத்துக்கு ஒரு கண் தெரியாது.

  • உலகத்தின் மிகவும் பெருமை வாய்ந்த கட்டிடமாக அனைவராலும் அதிசயத்து பார்க்கும் வெள்ளை மாளிகையில் முதன் முதலில் குடியேறிய அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்ஸ்.

  • வாத்துக்கு இரு கண்கள் இருந்த போதிலும் ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருக்கிறதாம் . அதன் மற்றொரு கண்ணினால் பார்க்க இயலாது.

  • கம்பயூட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

  • ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

  • நெப்போலியன், ஜூலியஸ் சீஸர், ஹானிபால், பதினான் காம் லூயி போன்ற மாவீரர்கள் பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தவர்கள்.

  • ஜப்பானியக் கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே இவை விமானத்தைப் போல முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும்.

  • இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்ககின்றன.

  • மனிதனின் இதயத் துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும், ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும், வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.

  • ஒலியைவிட வேகமாச் செல்லும் விமானத்தின் பெயர் சோனிக் விமானம். இது 1969-ல் முதன்முதலாகப் பறந்த போது மணிக்கு 2,333 கி.மீ. வேகத்தில் பறந்தது.

  • உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Grey hound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோ மீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

  • உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் பராகுவே நாட்டில் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2,40,000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாமாம்.

  • சூனியம் அல்லது சுழி (zero) என்ற எண் இந்தியர்களால் 3 ஆம் நூறாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

  • ஆசியா, ஐரோப்பா ஆகிய 2 கண்டங்களை இணைத்து வரும் ஒரே நகரம் இஸ்டான்புல் (துருக்கி) தான்.

  • இந்தியாவை மூன்று பக்கமும் சூழ்ந்துள்ள கடற்கரை ஓரத்தின் மொத்த நீளம் 7516 கிலோமீட்டர்கள் .

-கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.