........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

கடவுளின் சிம்மாசனத்தைக் காலியாக வை

  • நட்சத்திரங்களுக்குச் சந்திரன் அணிகலன். கணவன் மனைவிக்கு அணிகலன். அரசன் குடிகளுக்கு அணிகலன். கல்வியறிவு அனைவருக்கும் அணிகலன். 

 -கௌடில்யர்.

  • அம்பை நேராக நிமிர்த்துபவர் வில்லாளிகள். மரத்தில் சித்திரங்கள் பொறிப்பவர்கள் தச்சர்கள். தம்மைத் தாமே அடக்கி ஆள்பவர்கள் அறிஞர்கள்.

 -புத்தர்.

  • பெண்ணின் நிலை உயரும்போது ஆணின் நிலையும் உயரும். ஒவ்வொருவரின் நிலையும் உயரும் போது மனித சமுதாயத்தின் நிலையும் உயரும். 

-காந்தியடிகள்.

  • ஒருவனுடைய திறமைகள் அவனது தனிமையில்தான் மிக நன்றாக வளம் பெறுகின்றன. ஒருவனுடைய உயர் பண்பு உலகத்தின் அலை மோதல்களிடையே தான் மிகச் சிறப்பாக உருவாகின்றது. 

                    -கெதே.  

  • நாம் எல்லோருமே எவ்வளவு அறிவாளிகளானாலும், படித்துக் கொண்டிருப்பவர்கள் தான். யாருமே படித்தவர்கள் அல்ல. படிப்புக்கு முடிவு என்பதே கிடையாது.  

-ஹெரால்டு நிக்கல்ஸன்.

  • முட்டாள்களையும் பொய்யர்களையும் நீ தெய்வங்கள் என்று கூறுவதை விடக் கடவுளின் சிம்மாசனத்தைக் காலியாக வைத்திருப்பது நல்லது.  

-பெர்னார்ட்ஷா.

  • எவனொருவன் பிறரிடம் அன்புடன் நடந்து கொண்டிருக்கிறானோ ,  அவன் அது பற்றிப் பேசவே கூடாது. அந்த அன்பைப் பெற்றவன்தான் அது பற்றிப் பேச வேண்டும். 

-செனிகா.

  • உண்மை மனிதனை உயர்த்துவதில்லை. மனிதன்தான் உண்மையை உயர்த்துகிறான். 

 -கன்ப்யூஷியஸ்

  • ஒரு செயலை நம் சொந்த விருப்பம் அல்லது ஆசை காரணமாகச் செய்வது சரியல்ல. இந்த ஆசைதான் நம்மை வலிய இழுத்துச் சென்று பாவம் புரியத் தூண்டுகிறது.  

-ஸ்ரீ ஆசார்ய சுவாமிகள்.

  • நாம் நம்மைப் பற்றியே எண்ணாமல் செயல்படும் போது தான் நம்மில் நிறைவு பெற்ற சிறப்பான சக்திகள் செயல்படுகின்றன. 

-விவேகானந்தர்.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.