........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உலகப்   பழமொழிகள்

சுண்டெலியால் யானையைத் தூக்க முடியுமா?

  • கீழே விழுந்தவனைப் பார்த்துச் சிரிக்காதீர்கள். உங்கள் பாதையும் வழுக்கல் நிறைந்தது தான்.

-ஜப்பான்.

  • ஒரு மனிதனுக்கு நூறு நன்மையைச் செய்து விட்டு , ஒன்றைச் செய்யத் தவறினால் அவன் அனைத்தையும் மறந்து விடுகிறான்.

- யுகோஸ்லோவியா.

  • சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம். அறுவடை மோசமானால் ஓராண்டு நஷ்டம். விவாகம் மோசமானால் வாழ்நாள் முழுவதும் நஷ்டம்.  

-ஸ்வீடன்.

  • சேற்றிலுள்ள முள்ளும், வேட்டை நாயின் பல்லும், மூடனுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும். 

-அயர்லாந்து.

  • மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான். திறந்த கைகளுடன் அவன் அதை விட்டுப் போகிறான். 

-இந்தியா. 

  • விளக்கைத் தூண்டி விட்டால் வெளிச்சம் வரும். வரம்பில்லாமல் தூண்டினால் விளக்குச் சிம்னியே உடைந்து விடும்.

 -ஆஸ்திரேலியா.

  • பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை. நம்முடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதுமானது.

-ஸ்பெயின்.

  • தெரிந்தவை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. கேட்டதை எல்லாம் நம்ப வேண்டியதில்லை. முடிந்ததை எல்லாம் செய்ய வேண்டியதில்லை.

 -போர்ச்சுக்கல்.

  • உதவி செய்ய முடியாத அளவிற்கு யாரும் ஏழையல்ல. உதவி தேவைப்படாத அளவிற்கு யாரும் பணக்காரரல்ல.

-பின்லாந்து.

  • நீண்ட வழியில் சென்றால் வியர்வை வெளிவரும். குறுக்கு வழியில் சென்றால் இரத்தம் வெளிவரும். 

-அமெரிக்கா.

  • இருதயம் மட்டும் உறுதியாக இருந்தால், சுண்டெலியால் கூட யானையைத் தூக்க முடியும்.

-திபெத்.

  • ஒரு கண் எவ்வளவுதான் பெரிதாக இருந்த போதிலும் இரு கண்களே மேலானவை.

-நைஜீரியா.

  • நெற்றியைக் காயப்படுத்துவதை விட முதுகை வளைத்துச் செல்வது நல்லது .

-இங்கிலாந்து.

  • போவது சரியான பாதையாக இல்லாத போது, வேகமாக ஓடுவதால் என்ன பயன்?

-ஜெர்மன்.

  • சக்தி அதிகமாக இருப்பினும் ஓட்டம் நிதானமாகவே இருப்பது நல்லது.

 -மியான்மர்.

  • கோழைகள் கூட கூட்டமாகக் கூடிவிட்டால் பலமாகப் பேசுவார்கள்.

- ருமேனியா.

  • கரண்டி இல்லாதவனும், நண்பன் இல்லாதவனும் கையைச் சுட்டுக் கொள்வான்.

-அரேபியா.

  • திறமையான நீச்சல்காரனைத்தான் ஆறு அடித்துக் கொண்டு செல்கிறது.

 -ஆப்பிரிக்கா.

  • தவறான வழிகளில் சம்பாதித்த பொருளைக் காட்டிலும் கவுரவமான ஏழ்மையே சிறந்தது.

    - ஈரான்.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.