ஆன்மீக மொழிகள்
அன்பு ஒரு போதும் மாறாது.

-
குயவன் வேலை செய்யுமிடத்தில் குடம், ஜாடி, தட்டு,
சட்டி, பானை முதலிய வெவ்வேறு உருவங்கள் கொண்ட பாத்திரங்கள் இருக்கின்றன. ஆனால்
அவையெல்லாம் ஒரே களி மண்ணினால்தான் செய்யப்பட்டவை. அதைப் போல இறைவன் ஒருவனே.
ஆனால் அவன் வெவ்வேறு நாம ரூபங்கள் மூலமாக ஆராதிக்கப்படுகிறான்.
- ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
-பைபிள் கருத்து.
-
பசி, பட்டினி, வறுமை, வாட்டத்தின் காரணமாக
மனிதன் இறை நிராகரிப்பில் விழுந்து விடுவது வியப்புக்குரிய விஷயம் அல்ல. பசி,
பட்டினி, வறுமை, ஏழ்மை ஆகியவை இறை நம்பிக்கையை மிகக் கடுமையாகச் சோதிக்கக்
கூடியவை.
-நபிமொழிகள்.
-
இருளில் நடக்க முயற்சிக்கும் பொழுது, தட்டுத்
தடுமாறி கீழே விழுந்து விடுகிறோம். இருள் நீங்கி வெளிச்சம் வந்ததும். தங்கு
தடையின்றி எல்லோரும் தைரியமாக நடக்கின்றோம். அதைப் போலவே மக்களில் பலர் அறியாமை
எனும் இருளில் மூழ்கி, வாழ்க்கைப் பாதையில் தட்டுத் தடுமாறி நடந்து
கொண்டிருக்கிறார்கள். நமது உடலில் தெய்வீக ஆற்றல் பொருந்திய மெய்ஞான ஒளி
இருக்கின்றது. இந்த ஒளியை ஏற்றி வைத்துக் கொண்டால், நமது வாழ்க்கை தடம் புரளாது.
சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
-மகாமகரிஷி பரஞ்ஜோதியார்.
-
இறைவன் உன்னைச் சோதிப்பதேயில்லை. ஏனென்றால்
அவருக்கு உன்னைப் பற்றி முழுக்க முழுக்கத் தெரியும். உன்னுடைய கடந்த காலம்,
நிகழ் காலம், எதிர் காலம் எல்லாமே அறிவார். உன்னுடைய பலத்தையும் பலஹீனத்தையும்
அறிவார். உனக்குப் பலத்தைக் கொடுப்பவரே அவர்தான். உன்னை அவர் சோதிப்பதில்லை.
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
-
மனம் ஒருமைப்படாவிட்டாலும் மந்திர ஜெபத்தை
விடவேண்டாம். உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். தொடர்ந்து இறைவனது திருநாமத்தை
ஜபித்து வந்தால், காற்றில்லாத இடத்தில் உள்ள விளக்கின் சுடரைப்போல் மனம் தானாகவே
ஒருமைப் படும். காற்றே சுடரை ஆடச் செய்கிறது. அதுபோல் நம்மிடமுள்ள ஆசைகளும்
சங்கல்பங்களுமே மனதை அமைதியற்றதாக்குகின்றன.
- அன்னை ஸ்ரீ சாரதா தேவி.
-கபீர்தாசர்.
-தம்ம பதம்.
-
நமக்குப் பின்னால் ஒரு சக்தி இருந்து கொண்டு ,
அன்பு என்ற ஒன்றை நோக்கி நம்மை உந்தித் தள்ளிக் கொண்டு செல்கிறது. உண்மைப்
பொருளை எங்கே தேடுவது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நமது இந்த அன்பு அதைத்
தேடிச் செல்வதற்காக நம்மை முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது. நாம் திரும்பத்
திரும்ப நமது தவறை உணர்கிறோம். ஏதோ ஒன்றைப் பற்றுகிறோம். அது நமது
பிடியிலிருந்து நழுவி விடுகிறது. உடனே இன்னொன்றைப் பற்றுகிறோம். இவ்வாறு
முன்னேறிச் செல்கிறோம். இறுதியில் வருகிறது ஒளி. நம்மை நேசிக்கும் ஒரே ஒருவரான
ஆண்டவனிடம் நாம் வருகிறோம். அவனது அன்பு ஒரு போதும் மாறாது. எப்போதும் அரவணைக்கத்
தயாராக இருப்பது.
-சுவாமி விவேகானந்தர்.
-
புராணங்கள் கேட்டல், நாம ஜபம் செய்தல், சமய
நூல்களை ஓதுதல் ஆகியவற்றின் நோக்கம் உள்ளத்தைக் கழுவி , அங்கே சத்தியமும்
அன்பும் இடம் பெற்று மலரச் செய்வதுதான்.
-குரு நானக்.
-வினோபாஜி.
தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

|