........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அருள் மொழிகள்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அருள் மொழிகள்

பேரின்பம்

  • ஓசை விரிவடைந்தால் இசை

  • அசைவு விரிவடைந்தால் நடனம்

  • புன்னகை விரிவடைந்தால் சிரிப்பு

  • மனம் விரிவடைந்தால் தியானம்

  • வாழ்க்கை விரிவடைந்தால் விழா

  • பக்தன் விரிவடைந்தால் இறைவன்

  • உணர்ச்சிகள் விரிவடைந்தால் மெய்மறந்த இன்பம்

  • வெறுமை விரிவடைந்தால் பேரின்பம்.

புத்திசாலியாக...

  • நீ காலத்தை முந்திக் கொள்ளும் போது, நேரம் மெதுவாகப் போவதாகவும், சலிப்பாகவும் இருக்கிறது.

  • காலம் உன்னை முந்திக் கொண்டு போகும் போது, நீ ஆச்சரியமும், அதிர்ச்சியுமடைகிறாய். உன்னால் நடப்பதை சீரணிக்க முடிவதில்லை.

  • நீ காலத்தோடு சேர்ந்திருக்கும் போது, நீ புத்திசாலியாகவும், அமைதியாகவும் இருக்கிறாய்.

மேலெழுந்து விளங்கும் போது

  • ஆன்மாவை உணரும் உணர்வு மேலெழுந்து விளங்கும் போது, ஆனந்தம் பிறக்கிறது.

  • ஆசை மேலெழுந்து விளங்கும் போது, மன உளைச்சலும், துக்கமும் விளைகின்றன.

  • செய்கை மேலெழுந்து விளங்கும் போது, அமைதியற்ற தன்மையும், துன்பமும் விளைகின்றன.

எனக்குத் தராதே

  • உன்னால் தண்ணீரைத் தர இயலாதென்றால் எனக்குத் தாகத்தைத் தராதே

  • உன்னால் உணவைத் தர இயலாதென்றால் எனக்குப் பசியைத் தராதே

  • நான் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடியாதென்றால் எனக்குத் மகிழ்ச்சியைத் தராதே

  • என்னால் நன்றாகப் பயன்படுத்த முடியாதென்றால் நல்ல திறமைகளை எனக்குத் தராதே

  • காரணகாரியத்தைக் கடந்து என்னால் உணர முடியாதென்றால் எனக்கு அறிவாற்றலைத் தராதே

  • என்னால் அறிந்துணர முடியாதென்றால் எனக்கு ஞானத்தைத் தராதே

  • என்னால் சேவை செய்ய இயலாதென்றால் எனக்கு அன்பைத் தராதே

  • உன்னிடம் என்னைக் கொண்டு செல்லாத ஆசையை எனக்குத் தராதே

  • என்னை வீடுபேறுக்குக் கொண்டு சேர்க்காத ஒரு பாதையை எனக்குத் தராதே

  • உனக்குக் கேட்க விருப்பமில்லையென்றால் எனக்குப் பிரார்த்தனையைத் தராதே.

பலவீனப்படுத்தும்

எப்போது வரம்பு மீறப் படுகின்றதோ, அப்போது அது பயத்தை உண்டாக்குகிறது. பயம் வெறுப்புணர்ச்சியை உண்டாக்குகிறது. இந்த வெறுப்புணர்ச்சி நம்மை மீண்டும் வரம்பிற்குட்படுத்துகிறது. வரம்பிற்குள் இருப்பதற்கு, நீ தற்காப்பு தேடுகிறாய். உன் நிலையை நீ காக்கும் முயற்சி எவ்வளவு மன உளைச்சலைத் தருகிறது. இல்லையா? அவ்வாறு ஒவ்வொரு முறையும் நீ செய்யும் முயற்சி, உன்னைப் பலவீனப் படுத்துகிறது.

வரவேற்பும் எதிர்ப்பும்

நீ உன் மனதில் தோன்றும் எண்ணங்களை நல்லவையா, கெட்டவையா என வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம். வரவேற்பதும், எதிர்ப்பதும் ஒரு ஊஞ்சல் ஆட்டம் போன்றது.

வாழ்வில் முன்னேற நல்லெண்ணங்களை வரவேற்பது இன்றியமையாதது. அவ்வெண்ணங்களை நிலை நிறுத்துவதற்குக் கெட்ட எண்ணங்களை எதிர்ப்பதும் இன்றியமையாததே.

துவக்கம்

ஆம் எனும் மனம் அமைதியான, புனிதமான, இன்பமயமான மனம்.

இல்லை எனும் மனம் கிளர்ச்சியான, சந்தேகம் கொள்ளும் துன்பமயமான மனம்.

ஆம் எனும் மனநிலையில் விசுவாசம் துவங்குகிறது. இல்லை எனும் மனநிலையில் அது அழியத் துவங்குகிறது.

நம்பிக்கை

உனக்கு இறைவனிடம் நம்பிக்கை இருக்கிறதென்றால், அவரை அறிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யாதே. இறைவனும், ஆன்மாவும் அறிந்து கொள்ளக் கூடிய பொருட்களல்ல. நீ எதை அறிந்து கொள்ளக்கூடிய ஒரு பொருளாகச் செய்து கொண்டு விட்டாயோ, அதில் உனக்கு நம்பிக்கை கொள்ள முடியாது.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.