........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

வாழ்க்கையைக் கோட்டை விடலாமா?

அர்த்தமுள்ள வாழ்க்கை

நம்முடைய நாகரீகம் எப்படி பல பொருள்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்வது என்பதைத்தான் சொல்லிக் கொடுக்கிறது. சொத்து சேர்க்கும் ஆசையைத் தவிர்த்து, நம்மிடம் இருக்கும் சொத்தை எப்படி உபயோகமாகச் செலவிடுவது என்பதைப் பற்றி சொல்லிக் கொடுத்தால் பல நன்மைகள் உண்டாகும். தன்னிடமிருப்பதை எப்படி நல்லமுறையில் செலவு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளாதவ்னுக்கு சுதந்திரமும், அர்த்தமுள்ள வாழ்க்கையும் கிடைக்காது.

-கேப்ரியல் மார்ஸெல்

வாழ்க்கைக்கு சக்தி

வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்தைப் பெற விரும்புபவர்கள், எதற்கும் கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். உயர்ந்தவைகளைப் பற்றியே நினைக்க வேண்டும். எப்போதும் புன்னகையுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உயர்ந்த இலட்சியங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படி இருப்பதைக் கடினமான பயிற்சியின் மூலம் ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டு விட்டால், வாழ்க்கை சுவையானதாக மாறிக் கொண்டு வரும். உடலையும் மனதையும் ஆத்மாவையும் கடினமான முயற்சியால் உயர்த்திக் கொண்டவனுக்குப் பலமும், ஊக்கமும் கிடைக்கும். உழைப்பு மனத்திலும் உடலிலும் குடிகொண்டிருக்கும் சோம்பேறித்தனத்தை அகற்றுகிறது. ஆத்மாவை வலுப்படுத்துகிறது. சோர்வைத் தரும் நிகழ்ச்சிகளை சமாளிக்கும் தன்மையை, சக்தியைத் தருகிறது.

-நார்மன் வின்சென்ட் பீல்

சுவையான வாழ்க்கை

அளவுக்கு மீறிப் பணம் சேர்க்க வேண்டும் என்கிற வெறியில் உங்களை நீங்கள் வாட்டிக் கொள்ளாதீர்கள். உண்மையான உழைப்பின் துணையுடன், நியாயமாகக் கிடைப்பதைக் கொண்டு அதை நன்கு அனுபவிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்பவர்களுடைய வாழ்க்கை சுவையுடையதாக இருக்கும்.

-ஆதி சங்கராச்சாரியார்

வாழ்க்கையைத் தள்ளிப் போட்டு

வாழ்க்கையை நன்கு அனுபவிக்காமல் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டு வரும் மனித சுபாவம் மிகவும் வருந்தத்தக்கது. நம் கண்களுக்கு முன்பு, தொடும் தூரத்தில் மலர்ந்து மணம் வீசும் ரோஜா மலர்களை அனுபவிக்காமல், ஆகாயத்திலிருந்து ஒரு அழகான மலர்த் தோட்டம் குதிக்கப் போகிறது என்று அனைவரும் கனவு காண்பதிலேயே தங்களுடைய வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். குழந்தை, பெரிய பையனாக வளர்ந்தவுடன், வேலையில் சேர்ந்து மற்றவர்களால் மதிக்கப்படும் மனிதனாக மாறிய பின்புதான் தன்னால் இன்பமாக வாழமுடியும் என்று நினைக்க ஆரம்பிக்கிறான். வேலையில் சேர்ந்தபின்பு, திருமணம் செய்து கொண்டால்தான் இன்பம் கிடைக்கும் என்று நினைக்கிறான். திருமணம் செய்து கொண்டபின்பு, வேலையிலிருந்து ஓய்வு பெற்றால்தான் இன்பம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மனிதர்கள், இப்படித் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து, இன்பத்தை முற்றிலுமாகக் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.

-ஸ்டீபன் லீ காக்

அவமான வாழ்க்கை

உங்களுக்கு நேரமில்லையா? - நாகரீக மனிதனுடைய பெரிய நோய் இது. உங்களுக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும் நேரமில்லையென்றால் நீங்கள் கட்டாயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள். அப்படிப்பட்ட அவமான வாழ்க்கையை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். இந்தமாதிரி வாழ்க்கை வாழ்வதிலிருந்து உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளாவிட்டால், வாழ்க்கையில் இன்பம் என்பதை சிறிதும் காணாமல் உங்களை அழித்துக் கொண்டு விடுவீர்கள்.

-அலெக்ஸாண்டர் ஸோல்ஜினிட்ஸின்

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.