........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

வாழ்க்கையின் ரகசியம்

  • நமது இயல்பே அமைதிதான், நம் சொரூபமே சாந்த சொரூபம்தான்.

  • மனம் ஒரு பேய். எண்ணங்களின் மூலம் நம்மை அலைக்கழிக்க முயன்று கொண்டே இருக்கும்.

  • தியானம் என்றாலே எண்ணும் காரியத்தைக் கைவிடுவதுதான். நாம் உலகத்துக்கு வெளியில் இருந்து பழக வேண்டும். உலகமும் அதன் பிரச்சனைகளும் நம் மனதிற்குள் புகுந்துவிடக் கூடாது. சும்மா இருப்பதுவே தியானம். அதாவது இளைப்பாறுதல்.

  • உடல்தான் இயற்கை படைத்த மெய்யான பொருள். மனம் பொய்யானது. மனிதனின் பழக்கங்களினால் உருவாக்கப்பட்டது.

  • மனம் நம்மை நிகழ்காலத்திலிருந்து விலக்கி கனவு உலகத்துக்கு இட்டுப் போய்விடும்.

  • எந்தக் காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதாகப் பாவியுங்கள். எந்தக் காரியம் செய்தாலும், அதன் பலன்கள் மீது நமக்கு உரிமையும், ஆதிக்கமும் , அதிகாரமும் கிடையாது.

  • எது கிடைத்தாலும் அதை அப்படியே பிரசாதமாக ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

  • எதிலும் ஆசையும் பற்றையும் வளர்க்காமல் காரியம் செய்யப் பழகுங்கள். மனம் நம்மை ஏமாற்றாது.

  • நல்லது-கெட்டது, வெற்றி-தோல்வி என்பன தனித்தனியாக இல்லை. இரண்டுமாக இருப்பதே இயற்கை நியதி. அதுதான் வாழ்க்கையின் ரகசியம். அவரவர் சுவதர்மப்படி வாழ்தலே யோகம். அதேபோல மற்றவர்களையும் அப்படியே ஏற்று அணைக்கும் பாவமும், மனப்பக்குவமடைதலே சுதர்மம்.

  • எதையும் எடைபோட்டுத் தீர்ப்பளிக்கும் வழக்கத்தைக் கைவிடுங்கள். ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். தவறுகள், இன்பம், துன்பம் உலகில் இல்லை. எல்லாமே நமக்குள்ளேதான்.

  • உயிர்ச்சக்தியை உடலின் மேற்பகுதியிலேயே, முடிந்தால் உச்சியிலேயே வைத்துப் பழகுங்கள். விளிம்புக்குச் செல்லாதீர்கள். இருட்டை நீக்க இருட்டுடன் போராடாதீர்கள். வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள். இருள் தானாகப் போய்விடும். பகவானிடம் பட்டியலிட்டுப் பிரார்த்திக்காதீர்கள். போதும் என்கிற மனத்துடன் தியானியுங்கள்.

  • நாம் நிர்வாணமடைய வேண்டுமானால் அகங்காரம் என்ற ஆடையைக் களையுங்கள்.

  • வள்ளலாரின் அருள் வாக்காகிய தனித்திரு-பசித்திரு-விழித்திரு என்றபடி இருந்து பழகினால் நம் வாழ்க்கையில் பேரின்பம் அடையலாம்.

-தவத்திரு பிரம்மச்சாரி சகஜ சைதன்யா

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.