........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

பெரியவர்கள் யார்?

 கயவன் யார்?

தேவர், பித்ருக்கள், அந்தணர், புத்திரர், மனைவி, புகலடைந்தவர்- இவர்களை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதில் மட்டும் குறியாக இருப்பவன் கயவன்.

ஆடை- ஆபரணம், சந்தனம், மலர்மாலை ஆகிய பொருட்கள் இருந்தும் அனுபவிக்காமல் தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் கயவன்.

-மத்ஸய புராணம்

பாக்கியவான யார்?

நான், மலை அடிவாரத்திலிருந்து கிளம்பி மலை உச்சிக்கு என் சொந்த முயற்சியைக் கொண்டு ஏறிச் செல்ல விரும்புகிறேன். நான் பணக்காரர்களுக்குக் குழந்தையாகப் பிறக்காமல், ஏழைக் குழந்தையாய்ப் பிறந்ததற்குச் சந்தோஷப்படுகிறேன். என்னுடைய கழுத்தில் ஒரு மூட்டை தங்கத்தின் பளுவைச் சுமக்காமல், பணக்காரப் பெற்றோர்களின் பல கெட்ட குணங்களைக் கற்றுக் கொள்ளாமல் இருந்ததற்குச் சந்தோஷப்படுகிறேன். உண்மையில் நான் ஒரு பாக்கியவான்.

-நெப்போலியன் ஹில்

நித்திய சித்தர்களயார்?

ஹோமா பறவை ஒன்றின் மகிமையைப் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அது வானத்தில் மிக உயரத்தில் வசிக்கிறது. பூமிக்கு அது ஒரு போதும் வருவதில்லை. வானத்திலேயே  அது முட்டையிடுகிறது. அம்முட்டை நிலத்தை நோக்கி விழும் வேகத்தில் வெப்பம் பெற்றுக் குஞ்சு பொறித்து விடுகிறது. விழுகிற வேகத்தில் குஞ்சுகளுக்குக் கண் திறக்கிறது. சிறகு முளைக்கிறது. பூமியில் வந்து மோதினால் அது சிதறடைந்து செத்துப் போய்விடும். ஆனால் அதற்கு முன்பே அக்குஞ்சுக்குத் தன் தாயுடன் இருக்க வேண்டிய யதாஸ்தானத்தின் ஞாபகம் வருகிறது. அக்கணமே அது மேல் நோக்கிப் பறந்து போய் விடுகிறது. அப்பறவை போன்றவர்கள் நித்திய சித்தர்கள். 

பெரியவர்கள யார் ?

எந்தப் பெரிய காரியத்தை எடுத்துக் கொண்டாலும் சாதிப்பதற்கு எத்தனை பேர் முன் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. எத்தகைய உள்ளப் பண்பு வாய்ந்தவர்கள் முன் வருகிறார்கள் என்பதே முக்கியம். அதுவே வெற்றியை நிர்ணயிக்கும் திறனுடையது. உலகில் மகத்தான காரியங்களைச் சாதித்த பெரியவர்கள் அனைவரும் எப்போதும் தனித்து நின்றே போராடியிருக்கிறார்கள்.

-மகாத்மா காந்தி

தூயவர்கள்?

நாட்டுக்காகத் தியாகம் செய்யும் வீரன் தூயவன். குடும்பத்தைக் காக்கும் தலைவன் தூயவன். துயர் நீக்கும் நண்பன் தூயவன். சமூகத்தில் நன்னடத்தையுடன் வாழ்கிறவர்கள் தூயவர்கள்.

-ஸாம வேதம்.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.