........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். வலிமை எங்கே இருக்கிறது?
மாறுதல்கள் இயல்பானவை
மாறுதல்கள் எல்லாம் இயல்பானவை என்று
அமைதியாகவும் இன்முகத்துடனும் ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போது, காட்சிகள் மாறாவிட்டால் ரயில் நின்று
விட்டிருப்பதைக் காண்பீர்கள். மாறுதல் இல்லா விட்டால் வாழ்க்கை இல்லை.
-சின்மயானந்தர்.
விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஒரு சிறிய இன்பத்தைத் துறப்பதன் மூலம் ஒரு
பெரிய இன்பத்தை அடைய முடியுமெனில் பெரியதற்காகச் சிறியதை விட்டுக் கொடுப்பவன்
அறிவாளி.
-புத்தர்.
முதியவர்க்கு மரியாதை
முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் மரியாதை
கடவுளுக்குச் செய்யப்படும் மரியாதையாகும். முதியவர்களுக்கு அவர்களது
வயோதிகத்தின் காரணமாகக் கண்ணியமளிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும், அவர்களது
வயோதிகப் பருவத்தில் மரியாதை செய்பவர்களைக் இறைவன் நியமிக்கிறார்.
-நபிகள்
நாயகம்.
நன்றி
எதிர்பார்க்காதே
நன்றியை எதிர்பார்க்காதிருக்கப் பழகிக் கொள்வோம்.
எப்போதாவது அது கிடைக்கும் போது, எதிர்பாராத பரிசாக அது, இன்பம் தரும்.
-டேல் கார்னெகி
வலிமை வரும் வழி
வலிமை, உடலினின்று வருவது இல்லை. அசைக்க
முடியாத மன உறுதியிலிருந்து வருகிறது. நமது மனத்தின் தூய்மை அதிகமாக இருந்தால்
நமது வலிமையும் அதிகமாக இருக்கும். அவ்வளவுக்கவ்வளவு வெற்றி இன்னும் வேகமாகக்
கிடைக்கும்.
-காந்தியடிகள்.
இன்று ஒரு நாள்
இன்று, ஒரு கோபத்தை மறந்து சமரசம் செய்து
கொள்ளுங்கள். அல்லது, மறக்கப்பட்ட ஒரு நண்பரைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அல்லது,
ஏதேனும் ஒரு அரிய பொருளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது, ஒரு வாக்குறுதியை
நிறைவேற்றுங்கள். அல்லது, ஒரு தவறுக்காக மன்னிப்புக் கோருங்கள். அல்லது, ஒரு
குழந்தையின் உள்ளத்திற்குக் களிப்பூட்டுங்கள்.
-யாரோ |