........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

பிறரைக் குறை கூறுவது முட்டாள்தனம்

வலுவும் ஆற்றலும் 

எதிர்த்து நிற்கும் சூழ்நிலைகள் நமக்கு அதிக வலுவைத் தருகின்றன. நமக்கு ஏற்படும் இன்னல்கள், நம்முடைய எதிர்த்துப் போராடும் ஆற்றலையே அதிகப்படுத்துகின்றன. முதல் தடையைத் தாண்டுவதன் மூலம் அடுத்து வரும் தடையைத் தாண்டுவதுடன் மூலம் அடுத்து வரும் தடையைத் தாண்டுவதற்கான ஆற்றல் நம்மை அறியாமலேயே நமக்கு உண்டாகிறது.

-இர்வின்.

ஆன்மாவை வெற்றி கொள்ள...

விதியானது தன்னிடமுள்ள எல்லா அம்புகளையும் என் மீது பாய்ச்சட்டும். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இன்னும் எத்தனை வரினும் அத்தனையையும் தாங்கக் கூடிய ஓர் ஆன்மா என்னிடமிருக்கிறது. விதி எனக்குக் கட்டுப்படாததாய் இருக்கலாம். ஆனால், நானும் விதிக்குக் கட்டுப்பட்டவனல்ல. ஆன்மாவை வெற்றி கொள்ள எப்பொருளாலும் முடியாது.

-கவிஞர் ட்ரைடன்.

வீரனின் நற்பண்புகள்

நிலையில்லா மனம் நம் சக்திகளையெல்லாம் பயனற்றதாய் ஆக்கிவிடும். வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும் என்று எதிர்நோக்கி ஆயத்தமாயிருப்பதும், துணிவுடனும், யுக்தியுடனும் வந்த வாய்ப்புகளைக் கைப்பற்றுவதும், அவற்றைத் தீவீரத்துடனும் முழு முயற்சியுடனும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தன்னுடைய சாதனைக்குப் பயன்படுத்திக் கொள்வதும் ஆகிய இவையே வெற்றிபெறும் வீரனின் நீங்காத நற்பண்புகளாகும்.

-பெல்ப்ஸ்.

வெற்றி தரும் செயல்

எவ்விதக் குறிக்கோளுமின்றி, எவ்விதத் திட்டமுமின்றி முயற்சியாற்றுவதனால் மட்டுமே ஒருவன் மகத்தான வெற்றியைப் பெற்றுவிட முடியாது. முயற்சியிலும் ஓர் ஒழுங்கு பரிணமிக்க வேண்டும். சூழ்நிலைகளையும் சுற்றுசார்புகளையும் நன்கு சிந்தித்து அதற்கேற்ற வண்ணம் ஒருவன் செயலில் ஈடுபட வேண்டும். அதுதான் அவனுக்கு வெற்றியைத் தரும்.

-ஐசன் ஹோவர்.

எதிரிதான் உதவுவான்

எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுகிறான். நம்முடைய திறமைகளை கூர்மைப்படுத்துகிறான். ஆதலால் நமது எதிரியே நமக்கு உதவி செய்பவன்.

-எட்மண்ட் பர்க்.

முட்டாள்தனம்

பிறரைக் குறை கூறுவது முட்டாள்தனமென்று நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கற்றுக் கொண்டேன். என்னுடைய குறைகளை அகற்றுவதே எனக்குப் பெரிய துன்பமாக இருக்கிறது. இறைவன் பிறருக்குச் சரியான அறிவைக் கொடுக்கவில்லை என்று நான் வருந்துவதற்கு நேரமேது?

-ஒரு பெரியவர்.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய பொன்மொழிகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.