........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நித்திய ஜீவ வார்த்தைகள்
என்னுடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக
நடக்கிறது, நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று நினைப்பீர்களானால் அது மகா தவறு.
கடவுளை அறியாதவனுக்கு இந்த உலகம் மிகப் பெரியதாகக் காணப்படும். ஆனால்
அண்டசராசரங்களைப் படைத்த பரமாத்மா உங்களுடன் இருப்பாரேயானால் உலகம் சிறியதாகக்
காணப்படும்.
தைரியம் என்பது ஒருவனை அடிப்பது என்பதல்ல.
எதைச் செய்யக்கூடாதென்று கடவுள் தடை விதித்திருக்கிறாரோ அதைச்
செய்யாமலிருப்பதுதான் தைரியமாகும். பொய்யான மக்களை நீங்கள் நம்புகிறீர்கள்.
ஆனால் கடவுளை நீங்கள் முழுவதுமாக நம்புவதில்லை.
கடவுள் உங்களுடைய வாழ்க்கையைத்
திட்ட்மிடுவாரென்றால் நீங்கள் மகத்தானவர். உங்களுடைய ஆஸ்தியைப் பற்றி
அவருக்குக் கவலை இல்லை. அவரைச் சார்ந்திருந்து ஜீவியம் செய்கிறீர்களா
என்பதுதான் முக்கிய கேள்வி.
உங்களுடைய விண்ணப்பங்களை கடவுள் அருளவில்லை
என்றால் கோபபடாதீர்கள். பொறுமையாய் இருங்கள். ஒருவேளை உங்களுடைய விண்ணப்பமே
தவறானதாக இருக்கலாம்.
கடவுள் ஒரு போதும் பிரச்சனைகளை
உண்டாக்குவதில்லை. நீங்கள்தான் உங்கள் பிரச்சனைக்குக் காரணம். ஆனால் பழியைப்
பகவான் மீது போட்டு விடுகிறீர்கள்.
கடவுளை மறந்தவர்கள்தான் ஆலயங்களையும்
கோவில்களையும் கட்டுகிறார்கள். கடவுள் மனிதன் மேல் சுமத்தும் குற்றச்சாட்டு
என்ன? அவன் கடவுளின் சிருஷ்டிப்புக்குச் சாட்சியாக நடவாமல் நான், என் மனைவி,
என் பிள்ளைகள் என்று கூறி, தனக்குத்தானே சுயமாக ஜீவித்துக் கொண்டிருப்பதுதான்.
தியானம் என்றால் என்ன? கடந்த யுகங்களிலும்,
காலாகாலங்களிலும் கடவுள் நமக்குச் செய்த எல்லா நன்மைகளையும் நினைவு
கூறுவதுதான்.
முட்டாள் என்பவன் யார்? கடவுள் என்பவரைப்
பற்றிய அறிவு இருந்தும் தன்னிச்சையாகவே அதை ஏற்றுக் கொள்ளாதவன். ஆனால் பகவான்
என்பவரைப் பற்றிய முழு அறிவைப் பெற்றவன்தான் ஞானி.
சத்தியப் பிரச்சாரம் உங்களால் செய்ய
முடியவில்லை என்றால், நீங்கள் அமைதியாக இருங்கள். செய்யும் மக்களைத் தடை
செய்யாதீர்கள். அப்படிச் செய்வது பகவானுக்கு விரோதமான செயலாகும்.
ஒருவன் பெருமையடைந்து, தன்னைத்தான் தலைவனாக
ஆக்க வேண்டும். என்று தன்னை உயர்த்துவானெனில், அவனுக்கு வைகுண்டலோகத்தில் இடம்
கிடையாது.
கடவுள் முழு சக்தியோடு நம்மிடத்தில்
வருவாரென்றால் நாம் அழிந்து விடுவோம். ஆகவேதான் அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல்
வருகிறார். இல்லையெனில் நாம் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
தொகுப்பு: தாமரைச்செல்வி
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.