........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். பிச்சையெடுக்கும் பணக்காரர்கள்
சூரியனை மறைக்க முடியுமா?
சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல; நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும்,
அவற்றால்
சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்ய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும்.
-தாகூர். பயனில்லாத நம்பிக்கை நமக்கு ஏராளமான சந்தேகம் தோன்றுகிறது. அதற்காக நாம் மனச்சோர்வடைய வேண்டியதில்லை. சுத்தமான கேள்விகள் நம்பிக்கையை வலிவும் வன்மையும் உடையவனாய் வைத்திருக்கும். ஐயப்பாட்டுடன் தொடங்கினாலன்றி ஆழ்ந்த நம்பிக்கை கொள்வதென்பது சாத்தியமில்லை. சிந்திக்காமல் மேலெழுந்தவாரியான நம்பிக்கை கொள்பவனின் நம்பிக்கையால் பயனில்லை. அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருப்பவன் ரத்தமும், தண்ணீரும் சிந்தி அந்நம்பிக்கையைப் பெற்றிருக்கிறான். முள்ளும் புதரும் நிறைந்த காட்டைக் கடந்து நல்ல பாதையை அடைபவனைப் போல் சந்தேகத்திலிருந்து உண்மையை அறிய முயன்றவன். -ஹெலன் கெல்லர். பிச்சையெடுக்கும் பணக்காரர்கள் சிலரிடம் நிறைய இருந்தும், இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறார்கள். என்னிடம் மிகக் கொஞ்சமே இருந்த போதிலும் இன்னும் வேண்டும் என்ற ஏக்கம் என்னிடம் இல்லை. நிறைய இருந்தும் பிச்சையெடுக்கிறார்கள். என்னிடம் மிகக் கொஞ்சமே இருந்த போதிலும் மற்றவர்களுக்கு நான் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன். அவர்களிடம் ஒன்றும் இல்லை. என்னிடம் அனைத்தும் இருக்கிறது. அவர்கள் வாழ்வதில்லை. நான் வாழ்ந்து வருகிறேன். -சர்.எட்வர்ட் டையர். நிரந்தரமில்லாத வாழ்க்கை மனித வாழ்க்கை என்பது குறுகிய காலமே இருக்கக் கூடியது. அக்காலத்தில் தர்மத்தைப் போற்றி வாழ மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். செல்வத்தைச் சேகரிப்பதிலோ இன்பத்தை நாடி அலைவதிலோ பொழுதை வீணாக்கி விடக் கூடாது. இவை எல்லாம் நிரந்தரமானவை அல்ல. நொடிப்பொழுதில் மாறிவிடக் கூடியவை. -ஸ்ரீ ரஹோத்தமச்சார். கட்டுப்பாடுகள் எதற்காக? கட்டுப்பாடுகள் நமது மதத்தில் நமக்கு நன்மை கிடைப்பதற்காகத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அவற்றை மதித்து நடப்பதுதான் தர்மம். அதுதான் கடசியில் நன்மையைக் கொடுக்கும். அதை மீறி நடப்பதால் தற்காலிகமான லாபங்கள் கிடைக்கலாம். ஆனால் அவை நிலைக்கக் கூடியவை அல்ல. -பகவத் கீதை. மனத்தைச் சுத்தமாக வை பயனில்லாமல் எதேச்சையாக மனம் செல்வதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். திடீரென்று ஒருவர், "நீ இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்டால், உடனே தயங்காமல் உள்ளதை உள்ளபடியே "இதை நினைத்தேன், இது என் மனத்தில் உள்ள எண்ணம்" என்று எளிதில் செல்லக்கூடியவாறு மனத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். - மார்க்கஸ் அவுரேலியஸ். அச்சம் உருவாக்கும் எண்ணங்கள் உலகம் வீரர்களுடையது. சத்தியமான வார்த்தை. வீரனாக இரு. எப்போதும், "அச்சமில்லை!"என்று சொல்லிக் கொள். பிறருக்கும் இதைச் சொல். "அஞ்சாதீர்கள்! அச்சம் மரணம், அச்சம் பாவம், அச்சம் நரகம், அச்சம் அதர்மம், அச்சம் தீயொழுக்கம், உலகத்திலுள்ள தவறான எண்ணங்கள் எல்லாம் பயத்திலிருந்துதான் பிறந்திருக்கின்றன. -விவேகானந்தர். தெய்வத்தின் கருவியாக தெய்வமே! என்னைத் தங்கள் கருவி ஆக்கிக் கொள்ளுங்கள். பிறர் என்னைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நான் பிறரைச் சமாதானப்படுத்துவேனாக. பிறர் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், நான் பிறரைப் புரிந்து கொள்ள முயல்வேனாக. பிறர் என்னை நேசிக்கட்டும் என்று காத்திராமல், நான் அவர்களை நேசிப்ப்பேனாக. -புனித பிரான்ஸிஸ். தொகுப்பு: தாமரைச்செல்வி
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.