........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள்.
பைபிள் சொல்லும் கருத்துக்கள்
பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால் மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள். துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே. தீயோருடைய வழியில் நடவாதெ. அதை வெறுத்து விடு. அதன் வழியாய்ப் போகாதெ. அதை விட்டு விலகிக் கடந்து போ. ஆண்டவர் தம்மை நோக்கி வேண்டுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம். ஆகையால் பிறர் உங்களுக்கு எவைகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவைகளையே நீங்கலும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்கள் பெற்றோருக்குக் கீழ்படியுங்கள். உனக்கு நன்மை உண்டாகியிருப்பதற்கும், உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தந்தையையும் தாயையும் வணங்க வேண்டும் என்கிற ஆண்டவனின் கட்டளையை நிறைவேற்றுங்கள். சிறுமைப்பட்டவனும், எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உதவி செய்யும்படி உன் கையைத் தாராளமாகத் திறப்பாயாக. மனப்பூர்வமாய் நீ கொடுக்கும் போது, உன் எல்லாக் காரியங்களிலும் நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். நல்ல மனுஷனுடைய நடைகளைக் கர்த்தர் உறுதிப்படுத்துகிறார். அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். தீமையை விட்டு விலகி நன்மை செய். என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுத்துவோம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகள் எல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று இறைவன் அறிந்திருக்கிறார். இறைவனுக்கு உங்கள் வாழ்வில் முதல் இடம் கொடுங்கள். அப்பொழுது உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் அவர் சந்திப்பார். தன் வாழ்நாட்களில் நன்மையைக் காண விரும்புகிரவன், தன் நாவைப் பொல்லாப்புக்கும், தன் உதடுகளைக் கபடான பேச்சுக்கும் விலக்கிக் காக்கக் கடவன். அவன் பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தை விரும்பி அதைப் பின் தொடரக் கடவன். கர்த்தர் பிறர்மேல் தயை காட்டுபவர்களுக்குத் தயையுள்ளவராகவும், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு உத்தமராயும், புனித வாழ்வு வாழ்கிறவர்களுக்கு புனிதராகவும், மாறுபாடானவனுக்கு மாறுபடுகிறவராயும் தோன்றுகிறார். தொகுப்பு: தாமரைச்செல்வி
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.