........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்.

 அனுபவசாலிகள் பாக்கியவான்கள்

மனமெனும் பூங்கா

உழுதல், உரமிடுதல், களை எடுத்தல், முட்களை அப்புறப்படுத்துதல், மரம், செடி கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் முதலியவற்றின் மூலமாக நீங்கள் ஒரு தோட்டத்தில் பூ, பழம் முதலியவற்றை அபிவிருத்தி செய்யமுடிவதைப் போல பேராசை, சினம், கஞ்சத்தனம், மருட்சி, கர்வம் முதலிய அசுத்தங்களை அகற்றி தெய்வீக எண்ணங்களாகிய தண்ணீர் பாய்ச்சி மனமெனும் பூங்காவில் பக்தியெனும் மலரை நீங்கள் உற்பத்தி செய்யுங்கள். 

-சுவாமி ஞானந்தர்.

புனிதம் பெறுவது எப்போது?

மனிதர்கள் எப்போது புனிதமடைகிறார்கள்? தெய்வீக நிலையைப் பெறுகிறார்கள்? மோட்ச சாம்ராஜ்யத்திலிருக்கும் கடவுளிடம் ஈடுபாடு கொள்வதால் மட்டும் அந்நிலை மனிதர்களுக்குக் கிடைத்து விடுமா? மனிதனுக்குள்ளேயிருக்கும் கடவுளை உணர்ந்து அக்கடவுளிடம் ஈடுபாடு கொள்ளும் போது மட்டுமே புனிதம் பெறுகிறான். தெய்வீகநிலையைப் பெறுகிறான்.

 -பாகவதம்.

உலகப்பற்று

பால் நீருடன் கலக்கிறது. ஆனால் அதை வெண்ணெய்யாகக் கடைந்தெடுத்துவிட்டால் நீரில் மிதக்கும். அதில் கலக்காது. மனம் என்னும் பாலினின்று பக்தி, ஞானம், என்னும் வெண்ணெய்யை ஆத்ம் சாதனங்கள் மூலம் கடைந்தெடு. அதன் பிறகு உலகப்பற்று என்னும் நீரில் அது கலக்காது. 

-ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

அனுபவசாலிகள் பாக்கியவான்கள்

நாம் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறோம். நம்மைக் குறித்து காரணம் ஏதுமில்லாமல் வசை மொழி பாடியிருக்கிறார்கள். சிறையிலடைத்து நம்மை சிதர்வதை செய்திருக்கிறார்கள். நாம் உணர்ச்சி வசப்பட்டு பழிக்குப்பழி என்கிற கொலை வெறியுடன் செயல்படக்கூடாது. கொடுமைப் படுத்தியவர்களுக்குக் கிடைக்க முடியாத அனுபவம் நமக்குக் கிட்டியிருக்கிறது. நாம் அனுபவசாலிகள். கஷ்டப்பட்ட ஆத்மாதான் வளர முடியும். சுகப்பட்ட ஆத்மா அனுபவ்ம் கிடைக்காத ஒரு ஏழை. நல்லவைகள் நிலைத்து நிற்கும்படியான ஒரு சூழ்நிலையைத் தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவித்தவர்களினால்தான் அமைத்துக் கொடுக்க முடியும்.

 -அலெக்ஸாண்டர் ஸோல் ஜினிட்ஸின்.

நிலையில்லாதவை

கட்டுப்பாடுகள் என்பது மதத்தில் நன்மை கிடைப்பதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மதித்து நடப்பதுதான் தர்மம். அதுதான் கடைசியில் நன்மையைக் கொடுக்கும். அதை மீறி நடப்பதால் தற்காலிகமான லாபங்கள் கிடைக்கலாம். ஆனால் அவை நிலைக்கக் கூடியவை அல்ல. 

-பகவத் கீதை விளக்கம்.. 

தொகுப்பு: தாமரைச்செல்வி

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.