........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். கொடுப்பதைத் தடுக்க முடியுமா?
ஆண்டவனுக்கு உதவமுடியுமா? ஆண்டவனுக்கு உதவுவதாக எப்போதும் சொல்லாதீர்கள். நீங்கள் அவருக்காகப் பணியாற்றும் பேறு பெற்ற பாக்கியசாலிகள் மட்டுமே. ஆகவே ஆண்டவனுக்கு உதவி எனும் சொல்லை உங்களது உள்ளத்திலிருந்தே நீக்கி விடுங்கள். நீங்களாக விரும்பி உதவி செய்ய முடியாது. அவரது விருப்பத்தினால்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். உங்களால் அவரை வழிபடத்தான் முடியும்.
கடவுள் நாயில் இருக்கிறாரா? நீங்கள் ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு கொடுக்கும் போது, அந்த நாயை கடவுளாகவே பாவித்து வழிபடுங்கள். ஏனென்றால் அந்த நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார். எல்லாவற்ரிலும் இருக்கிறார்.
இறைவன் விக்கிரகத்தில் மட்டுமா? தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவரே, உண்மையில் அவரை வழிபடுகிறார். இறைவனை விக்கிரகத்தில் மட்டும் காண்பவருடைய வழிபாடு ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.
கடவுள் எங்கே குடியிருக்கிறார்?
கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வெறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவு தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.
பகல் கனவுகள் எது? உலகமாகிய இந்த நரகத்தில் ஒரே ஒரு நாளாவது, ஒரே ஒருவனின் இதயத்திற்காவது சிறிதளவு இன்பமும், மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அது மட்டுமே நிஜமான சேவையாகும். இந்த உண்மையை வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன். மற்றவையெல்லாம் பொருளற்ற வெறும் பகல் கனவுகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தடுக்கும் சக்தி இருக்கிறதா?
தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியை சிதறவிடக் கூடாது. அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும். யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதி உடையவராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
விதி என்றால் என்ன?
-சுவாமி விவேகானந்தர். தொகுப்பு: தாமரைச்செல்வி
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.