........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
உலகப் பழமொழிகள் புலியைப் பிடிக்க வேண்டுமா?
பயிர் செய்யும் போது ஒருவன் தனியாக உழைக்கிறான். அறுவடை செய்யும் போது நண்பர்கள் சுற்றி வளைக்கிறார்கள்
- ஆஸ்திரேலியா.
நாக்குதான் மனிதனைக் கொல்கிறது; நாக்குதான் மனிதனைக் காப்பாற்றுகிறது.
- ஆப்பிரிக்கா.
தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை. காதல் வந்துவிட்டால் அழகே தேவையில்லை.
-ஆப்கானிஸ்தான்.
நாளை கிடைக்கும் கோழியை விட இன்று கிடைக்கும் முட்டை மேலானது
- அல்பேனியா.
ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
- அரேபியா.
பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம். நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.
-அர்மீனியா.
கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கின்றவன் கவுரவமில்லாமல்தான் சாவான்.
-அயர்லாந்து.
வெள்ளத்தோடு வந்தவையெல்லாம், வெள்ளம் வடிந்தவுடன் போய் விடும்.
-அமெரிக்கா.
ஒருவன் நிர்வாணமாக இருக்கும் போது எழுந்து நிற்பதைவிட உட்கார்ந்திருப்பது மேலானது.
-அங்கேரி.
மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும் போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.
-ஹாலந்து.
மனித இனம் பெருந்தன்மையானதுதான். ஆனால் மனிதர்கள் சிறுமையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
-ஸ்பெயின்.
வேலைக்காரனுக்கு நல்ல உணவு கொடுத்தால் -பசு அதிகமாகப் பால் கறக்கும்! பூனை கொஞ்சமாகப் பால் குடிக்கும்.
-ஸ்வீடன்.
அடுத்தவன் வீட்டை நீ உலுக்கினால் உன் வீடு சீக்கிரம் உன் தலையில் விழும்.
-சுவிட்சர்லாந்து.
ஆடுகளின் ஒற்றுமை-சிங்கத்தைப் பட்டினியாகப் படுத்திருக்கச் செய்கிறது.
-சான்ஸிபார்
உன் அடுத்த வீட்டுக்காரனை நேசி. ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே!
-ஜெர்மனி.
உடலின் அழுக்கு கழுவினால் போகும். மனதின் அழுக்கு மரணத்தில்தான் போகும்.
-வங்காளம்.
ஒரு பெண் விரும்பினாலும் சரி, வெறுத்தாலும் சரி -எதையும் செய்யத் துணிந்து விடுகிறாள்.
-லத்தீன்.
இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம் துன்பத்தை நோக்கி நகருகிறது.
-ருமேனியா.
நோயாளி கொஞ்சம் சாப்பிடுகிறான். ஆனால், அதிகம் செலவழிக்கிறான்.
-ரஷ்யா.
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவர் ஒரு பெரிய மனிதராவார்.
-யுகோஸ்லேவியா. காதல் பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும்தான் முதலில் நுழைகிறது.
-போலந்து.
புகை நுழைய முடியாத இடத்திலும் போதனைகள் நுழைந்து விடும்.
-போர்ச்சுக்கல்.
முட்டாள்தனத்தை மூலதனமாகக் கொண்டு செயல்படும் எந்தச் செயலும் வெற்றியை ஈட்டுத் தராது.
-பெல்ஜியம்.
செல்வத்தை மறைக்கலாம். ஆனால், வறுமையை மறைக்க முடியாது.
-பின்லாந்து.
நேற்று முட்டையிலிருந்து வெளி வந்தது. இன்று அது முட்டையைப் பழிக்கிறது.
-துருக்கி.
கன்று, முட்டையும் வேண்டுமென்றால் பசுவையும், கோழியையும் பயமுறுத்தக் கூடாது.
-திபெத். பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை.
-டென்மார்க்.
வாழ்க்கையில் தோல்வியுற்ற ஒருவனிடம், உனது வெற்றியைப் பற்றி பேசுவது, அவனது பகையைச் சம்பாதிப்பதாகும்.
-சீனா.
புலியைப் பிடிக்க வேண்டுமானால், நீ முதலில் மலைப் பக்கம் போக வேண்டும்.
-கொரியா.
நோய் வந்தபோது ஒருவன் தன் உயிரைப் பற்றி நினைக்கிறான். சுகமான போது பணத்தைப் பற்றி நினைக்கிறான்.
-ஜப்பான்.
தொகுப்பு: தாமரைச்செல்வி
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.