........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். நபிகள் நாயகம் கருத்துக்கள்
கஷ்டப்படும் ஒருவருக்குத் தன்னால் உதவி செய்ய முடியாவிட்டாலும் அதைச் செய்ய முடிந்தவரிடம் சென்று சிபாரிசு செய்தால் அந்த தர்ம காரியம்
செய்பவர் அடையும் நன்மையில் ஒரு பாகம் நன்மை செய்தவருக்குக்
கிடைக்கும்.
நோய்வாய்ப்பட்டிருக்கும் அல்லது வேதனைகளைத் தாங்கிக் கொள்ளும் இறை நம்பிக்கையாளருடைய பாவங்கள், மரங்கள் தமது இலைகளை உதிர்ப்பது போன்று களையப்பட்டு விடுகின்றன.
பிறருடைய பொருளைப் பொய் சாட்சியம் கூறி அபகரிப்பவனை சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாதபடி இறைவன் தடுத்துவிடுவான்.
பகைவர்களிடமும் அன்பு காட்டுங்கள். அவர்கள் உங்களுக்குத் தாங்க முடியாத துயரங்களைக் கொடுத்தாலும் கூட பொறுத்துக் கொண்டு மன்னித்து விடுங்கள்.
இறைவணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஆயிரம் வழிபாட்டாளர்களை விட சைத்தானின் மீது நுட்பமான அறிவுள்ள ஓர் அறிஞர் மிகவும் கடினமானவர் ஆவார்.
பெண்களின் பாதுகாவலர்கள் ஆண்களே. ஒரு பெண் கணவனுக்கு எதிராக நடப்பதாகக் கருதினால் அவர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள். அவளைத் திருத்தும் வழியைத் தேடுங்கள். அப்படி அவள் திருந்தாவிட்டால் அவளை அநியாயமாகத் தண்டிக்க வழி தேடாதீர்கள்.
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உண்மையில் இருந்து தவறி விடாதீர்கள். எப்போதும் நேர்மையுடனும் நியாயத்துடனும் நடந்து கொள்ளுங்கள்.
உழைப்பாளிகளின் வியர்வை உலர்வதற்கு முன்பே அவர்களின் கூலியைக் கொடுத்து விடுங்கள்.
நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதை விட வருகின்ற மரணத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்.
தொகுப்பு: தாமரைச்செல்வி
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.