........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

கவலை என்பது எதுவரை?

உயிரெழுத்தில் துவங்கும் தமிழ் பழமொழிகள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

  • அகல உழுகிறதை விட ஆழ உழு.

  • அகல் வட்டம் பகல் மழை.

  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.

  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

  • அடாது செய்தவன் படாது படுவான்.

  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

  • அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

  • அந்தி மழை அழுதாலும் விடாது.

  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

  • அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

  • அழுத பிள்ளை பால் குடிக்கும்.

  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

  • அறச் செட்டு முழு நட்டம்.

  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

  • அறமுறுக்கினால் அற்றும் போகும்.

  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.

  • அறிய அறியக் கெடுவார் உண்டா?

  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

  • அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.

  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

  • அற்ப அறிவு அல்லற் கிடம். அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

  • ஆரால் கேடு, வாயால் கேடு.

  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

  • ஆழமறியாமல் காலை இடாதே.

  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.

  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

  • ஆனைக்கும் அடிசறுக்கும்.

  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே...

  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

  • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.

  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

  • இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.

  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

  • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை. இராச திசையில் கெட்டவனுமில்லை.

  • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

  • இருவர் நட்பு ஒருவர் பொறை.

  • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

  • இளங்கன்று பயமறியாது

  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

  • இறங்கு பொழுதில் மருந்து குடி

  • இறுகினால் களி , இளகினால் கூழ்.

  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

  • இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

  • இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

  • ஈர நாவிற்கு எலும்பில்லை.

  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.

  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.

  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.

  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

  • உலோபிக்கு இரட்டை செலவு.

  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

  • உளவு இல்லாமல் களவு இல்லை.

  • உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.

  • உள்ளது போகாது இல்லது வாராது.

  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய

  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்

  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.

  • உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

  • ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.

  • ஊண் அற்றபோது உடலற்றது.

  • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

  • ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?

  • ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்.

  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

  • ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

  • ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

  • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.