........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

காதலிக்கப் போகிறீர்களா?

இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

  • காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது.

- பாரசீகப் பழமொழி

  • சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.

- காத்தரின் ஹெப்பர்ன்

  • காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.

- பிரயன் வாங்

  • காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள்

-ரஷ்யப் பழமொழி

  • ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டு விட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

- டி.ஹெச். லாரன்ஸ்

  • பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது.

-போலந்து பழமொழி

  • காதல் என்பது ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.

- ஆம்புரோஸ் பியர்ஸ்

  • காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.

- ஜூல் ரெனா

  • காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.

- ஆல்ஃப்ரெட் டென்னிசன்

  • காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.

- டக்ளஸ் யேட்ஸ்

  • காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.

- யாரோ

  • காதல் நோய்க்கு மருத்துவன் இல்லை.

-ஆப்பிரிக்கப் பழமொழி

  • கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.

- யாரோ

  • விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்: அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.

-வில்லியம் தாக்கரே.

  • இன்பத்தின் இனியதும் துன்பத்தின் கொடியதும் காதலே.

-பெய்லி

  • காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல்.

-டென்னிசன்

  • சூரியன் மறையலாம்; ஆனால், நிலையான காதல் மறைவதில்லை.

-ஊட்

  • உண்மை காதல் அனைத்துக்கும் பரஸ்பர மதிப்பே அடிப்படை.

-ஜார்ஜ்

  • காதலே, காதலின் வெகுமதி.

-ஜான் டிரைடன்.

  • காதல் - தன்னைத் தானே அளிப்பது; விலை கொடுத்து அதை வாங்குவதில்லை.

-லாங்பெல்லோ.

  • காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான்.

-ஸ்லிப்ட்

  • உண்மையான காதல், எண்ணத்திலே மலர்ந்து உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும்.

-கர்னிலியஸ் நீல்.

  • காதலால் வீரனானோர் சிலர். மூடரானோர் பலர்

-சுவீடன் பழமொழி

  • உலகை வலம் வரவும், சுற்றி வரவும் செய்வது காதல்.

-மார்லோ

  • ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.

-பைரன்

  • காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.

-ஜெரோம்.

  • உண்மையான காதல் ஒரு தணியாத வேட்கை, இனிமையான தொடர்கதை, அணையா தீ.

- ஆபின்டன்

  • காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது.

-லோவில்

  • யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல்.

-கதே

  • அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல்.

-சார்லஸ் டிப்டின்.

  • தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல்.

-கேபிள்

  • போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்.

-ஹெர்பர்ட்.

  • காதலிக்கும் போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

- யாரோ

தொகுப்பு: தாமரைச்செல்வி

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.