........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

புகழை நாம் தேடிச் செல்லலாமா...?

  • சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!

  • வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

  • ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.

  • புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.

  • ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.

  • எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மைதான் நிலைக்கும் என்பதை மனதிற்கொண்டு விமர்சியுங்கள்.

  • சராசரி மனிதனின் எண்ணங்களையும், அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.

  •  மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காக பெற்றோர்களைத் துன்புறத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

  • கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில்தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.

  • நடை, நடத்தை என்பதை நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. நடைதான் நடத்தையாகிறது.

  • சாதிகள் தேவையில்லை; மதப்பிரச்சினை தேவையில்லை; மனிதர்களாக நாம் வாழ வேண்டுமென்றால் சாதி, மதப் பிரச்சினைகளை வைத்துப் பேசக்கூடாது.

  • எனக்கு என்ற எண்ணம் வராமல், நமக்கு என்ற எண்ணம் வரவேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் வளர்ந்தால் நாட்டில் ஒற்றுமை வளரும். சாதிக் கொள்கை ஒற்றுமையை ஏற்படுத்தாது. மத்த்தில் பெயரால் தூய்மை தெரியவில்லை. தாழ்வுதான் தெரிகிறது. இத்தகைய சாதி உணர்வுகளை அகற்றச் சூளுரை ஏற்போம்.

  • நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட கேட்டுத் தெரிதல் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

  • உயர்வு, தாழ்வு என்ற நிலை சமூகத்தில் இல்லாதபடி செய்ய வேண்டும். அதற்குரிய சட்டங்களைச் செய்ய வேண்டும். சமூக சீர்திருத்தம் பேசிப் பயனில்லை.

  • ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாத போது அந்த மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

  • திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்து விடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அதுதான் அஸ்திவாரம்.

  • உடலைப் பேணிக் காப்பது, தேகப்பயிற்சி செய்வது உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத் தூய்மை பெறுவது, எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது; தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது - இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமையாகும்.

  • நாம் வந்த வழியை மறந்து விட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.

  • மதத்தின் பெயரால் பிரச்சினைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால்தான் பிரச்சினைகள் வருகின்றன.

  • ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அமைதியில்தான் ஆரம்பமாகிறது. பிறகு இறுதியில் உச்சக்கட்டம் ஏற்பட்டு முடிகிறது.

  • நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றி கிட்டும்.

- எம்.ஜி.ராமச்சந்திரன்.

தொகுப்பு: தாமரைச்செல்வி.

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.