........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

பெண் மொழிகள்

  • பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது

- மில்டன்

  • எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும்.

- மனு

  • ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது

- டிக்கன்ஸ்

  • பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு

- ஜேம்ஸ் எல்லீஸ்

  • உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த பெண்ணே.

-லவல்

  • அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது.

-ஹீஸ்

  • பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது

- இக்பால்

  • பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.

 - சைரஸ்

  • வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.

 - கண்டேகர்

  • நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான்

- மெர்ஸன்

  • பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ, அங்கு ஆடையும், பண்பும் அடைக்கலம்

- மாபசான்

  • பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம்

-துவிஜேந்திரலால்

  • ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான்

- வால்டேர்

  • ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.

-ஜவஹர்லால் நேரு

  • காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்

- ஷேக்ஸ்பியர்

  • அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்

-ஜெயகாந்தன்

  • பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு

- லெனின்

  • சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்

- காந்தியடிகள்

  • அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது

- டேவிட்ஹ்யூம்

  • ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்

- ரூஸோ

  • பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர்

- ரவீந்திரநாத் தாகூர்.

தொகுப்பு: தேனி.எஸ்.மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.