........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் பொய் சொல்லிப் பிறரை ஏமாற்றலாமா?
வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம்.
நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும்
நம்மை விட்டு அகலவில்லை.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும்
பின்னணியில் ஏதோ ஓரிடத்தில்! அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக
இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தாம். அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு
காரணமாகும்.
உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி
இகழ்ந்தாலும் சரி நீ. உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல்
கவனமாக இருக்க வேண்டும்
மனிதப் பிறவிதான் பிரபஞ்சத்திலேயே மிகச்
சிறந்ததாகும் எல்லா மிருங்களைக் காட்டிலும் எல்லாக் தேவர்களைக் காட்டிலும்
மனிதர்களே உயர்ந்தவர்கள். மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை.
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன்
அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய
குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல.
அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது.
மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த
உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே
வழியாகும்.
பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு
கலை. பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும்.
ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம்
பெறுவார்கள்.
துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான்
ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.
கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்;
மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத் தேவை. வலிமைதான்
வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.
தொகுப்பு:
மு.சந்திரசேகர், இராசபாளையம்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.