........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் நட்பு என்பது அவசியமா?
இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர்
மன்னிக்க முடியாவிட்டால், அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது
- புளுவர்.
ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும்,
நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை
- அறிஞர் அண்ண ா
பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே, நீ
கொடுப்பது நின்றால் அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்று விடுவர்.
-புல்லர்
உன்னை விட உயர்வான ஒரு மனிதரைத் தவிர மற்றவருடன்
ஒரு போதும் நட்பு கொள்ள வேண்டாம்.
- கன்பூசியஸ்
நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால்
நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.
-சாக்ரடீஸ்
ஒரு நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நல்ல நண்பானாய்
இருப்பது ஒன்றே வழியாகும்.
-எமர்சன்
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை
இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.
-வோல்டன்
உலகின் அதிபதியாக இருந்தாலும், ஒரு நண்பன்
அவசியமே
-யங்
முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில்
வேறு பாக்கியம் இல்லை.
-யூரிபிடிஸ்
நம்மைப் பாராட்டி மதிப்பதை விட நம்மிடம்
அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் பங்கு கொள்பவனே நண்பன்
- சான்னிங்
வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும்.
வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்தான்.
-சிட்னிஸ்மித்
தொகுப்பு:
தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.