........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் மக்களை ஏமாளி என்று நினைக்கலாமா?
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை; மகிழ்ச்சி
தேவை; இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடை இல்லாமல் இருப்பதுதான்.
மொழி, இனம், கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றை
மக்களை ஒன்று சேர்ப்பதற்கும் சமுதாயத்தை உயர்த்துவதற்கும் மேன்மைப்
படுத்துவதற்கும் பயன்பட வேண்டும். இந்த உயரிய
குறிக்கோள்தான் தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோளாகும்.
அகமும் புறமும் ஒன்றுபட்டு இயங்கப்
பகுத்தறியும் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதைப் பயன்படுத்தத்
தவறுவதனாலேயே மக்களிடையே மாறுபட்ட தன்மைகள் இடம்
பெறுகின்றன.
மாற்றங்களின்றி முன்னேற்றமில்லை;
முன்னேற்றமில்லையேல் வரலாறு இல்லை. மாறுதல் என்பது சிறப்பாக அமையும் போதுதான்,
அதுவே முன்னேற்றத்திற்கான சீரான பாதையினையும் அமைத்துக் கொடுத்து
விடுகிறது.
நமது பணிகளில் தாமதம் கூடாது. நமது பயணத்தில்
தயக்கம் இருத்தலாகாது. நமது உழைப்பில் குறைபாடு இருத்தல் ஆகாது.
சாதி, மத, இன பேதங்களை
எல்லாம் கடந்து நின்று தமிழக மக்கள் கொண்டாடும் தனிச்
சிறப்புடைய திருநாள் பொங்கல் திருநாள். உழவரும் பிற துறைகளில்
உழைப்போரும் ஒன்று கூடி உழைப்பால் விளைந்த செல்வங்களைப்
பகிர்ந்து உண்டு மகிழும் திருநாள் இது.
ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது.
கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல. ஜாதி என்பது அதிகமாகப் பேசப்பட வேண்டியதில்லை.
உழைக்கும் வர்க்கம் எடுத்துக்
கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது; ஆனால் அதற்கு முன்பு நாமே
கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நல்ல நிலைக்கு வந்த பிறகும் நாம் அனுபவித்த
துன்ப, துயரங்களை நினைவில் கொண்டால்தான் நமது கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியும்.
சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள்.
அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக்
காரணம்.
இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச்
சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு
வாழமுடியும்.
கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும்
உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தையும் காட்ட முடியும்.
வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான்
அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
எழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று
கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம்
இல்லை; வசதி இருக்கும் போது எளிமையாக இருபதுதான் தியாகம்.
வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு
ஆபத்தான , பயங்கர விஷவாயு ஆகும்.
நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது நீங்கள்
உழைத்து உண்பதே ஆகும்.
உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால்
இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.
- எம்.ஜி.ராமச்சந்திரன்.
தொகுப்பு:
தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.