........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் வெற்றி வேண்டுமா?
எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே, வெற்றியாக
வளர்கிறது. - வால்டேர்
வெற்றியின் அடிப்படை, எடுத்த செயலில் நிலையாக
நிற்பதே. -வால்டேர்
நல்ல செயலின் துணிவு உடையவர், நாள்தோறும்
வெற்றியே காண்பர். -புரூக்
நல்ல செயல்களில் துணிவுடையவர் நாள்தோறும் வெற்றி காண்பர் - புரூம்
வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாக
ஆகிவிடுகிறது. -ஹாப்பர்
தன்னைத்தானே அடக்கி வெற்றி கொண்டவனே உயர்தரமான
வெற்றியாளன் -புத்தர்
நம்பிக்கையை விடாதே அதுதான் வெற்றியின்
முதல்படிக்கட்டு - அண்ணாத்துரை
தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்
-வீல்
வெற்றியும் தோல்வியும் மற்றவர்களால் உங்கள் மீது
திணிக்கப்படுவதில்லை. -எல்மர்
மாணவனை மதிப்பதில்தான்
கல்வியின் வெற்றி அடங்கியுள்ளது. -எமர்சன்
யாருக்கும் தோல்வியில்லாத வெற்றிக்குப்
பெயர்தான் சமாதானம். -நேரு
தியாகத் தழும்பு பெறாமல் நீ வெற்றி பெற முடியாது.
-புசிடன்
ஒருவன் தனக்கு அளவற்ற உற்சாகம் இருக்கும் எந்தத்
தொழிலிலும் வெற்றிபெற முடியும்.
-எமர்சன்.
வெற்றி பெற்றே தீருவேன் என்று உன்னுடைய மனதில்
நீ மேற்கொள்கிற திட சங்கல்பம்தான் வெற்றிக்கு அடிப்படை.
-லிங்கன்
நீ உச்சி சென்று வெற்றி காண விரும்பினால் மெல்ல
மெல்ல கீழ்மட்டத்திலிருந்து துவங்கு
-சைரஸ்
வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்துக்
கொள்பவன் இரண்டாம்முறை வென்ற மனிதனாவான்.
- லத்தீன் பழமொழி
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும்
வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும். ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு
இருந்தாக வேண்டும்.
-விவேகானந்தர்
ஒரு நல்ல யோசனை தோன்றும் போது அதை உடனடியாகச்
செய்து முடித்தால் வெற்றியை நோக்கித் திரும்பிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
-கிளமெண்ட்
இரவு பகல் பாராமல் ஓயாது உழைத்தால்தான் வெற்றியை
நழுவாமல் காக்க முடியும்
-ஸ்வேர்டு.
பிரச்சனைகள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக
உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.
-கென்னடி
தொகுப்பு:
தேனி.எஸ்.மாரியப்பன்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.