........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

ஆலோசனைகளை அள்ளி வீசுபவர்கள்!

 • நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர, நல்லோர்க்கு வேறு மருந்து கிடையாது.

-ஷேக்ஸ்பியர்

 • பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும்.

-புல்லர்

 • பிறருடைய அன்புக்குப் பாத்திரமாவதை விட பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவதே மேல்.

-மெக்னால்ட்

 • உனக்குத் தெரிந்ததை தெரியுமென்று ஒப்புக் கொள். தெரியாததைத் தெரியாது என உணர்தல் அறிவு.

- கன்பூஷியஸ்

 • விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவது பெரிதன்று. எப்போதும் உயர்ந்தபடி இருக்க வேண்டும். அதுவே பெரிது.

 -இப்தார்க்

 • சண்டை போடும் நேரமெல்லாம், உண்மை அதன் சத்தியத்தை இழந்து விடுகிறது.

- ரைரன்

 •  நல்லவர்களின் புத்திமதியைப் புறக்கணித்து, துஷ்டர்களின் யோசனையைப் பின்பற்றுகிறவன் உயிரைக் காப்பாற்ற முடியாது.

-பஞ்சதந்திரம்

 • உழைப்பால் கிடைத்த சொந்தப் பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.

-ஹென்றிபோர்டு

 • ஒருவன் எப்போதும் வீரனாய் இருக்க முடியாது. ஆனால் ஒருவன் எப்போதும் மனிதனாய் இருக்க முடியும்.

-கதே

 • வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான்.

-பெர்ஸியஸ்

 • உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.

 -வோல்டன்

 • ஏழையை உலகம் மதிப்பதில்லை. பணக்காரனைக் கண்டு பொறாமைப்படுகிறது.

- ஹென்றி போர்டு

 • மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால்தான்.

 -எடிசன்

 • வெறுமனே மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம் ஆகாது.

-மு.கருணாநிதி

 • பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் ஆலோசனைகளை அள்ளி வீசுவர்.

- மால்கம்

 • தீயமனிதர்கள் பயத்திற்குக் கீழ்படிகின்றனர். நல்ல மனிதர்கள் அன்புக்குக் கீழ்படிகின்றனர்.

- அரிஸ்டாட்டில்

 • நாம் இதுவரை முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் நல்லவர்களோடு பழகவில்லை.

-கிருபானந்த வாரியார்

 • கடந்து போன விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கண்ணீரை மென்மேலும் வீணாக்காதீர்கள்.

-ஐரிபைடஸ்

 • நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது.

-விவேகானந்தர்
தொகுப்பு: தேனி.எஸ்.மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.