........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

பொன்மொழிகள்

எதற்கும் மறுபரிசீலனை செய்யுங்கள்!

 • உலகத்தில் மிகவும் மலிவான பொருள் அன்புதான்.அதை வாங்குகிறவனுக்கும், விற்பவனுக்கும் பன்மடங்கு லாபத்தைத் தரும்.

-இங்கர்சால்

 • என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதே வெற்றியின் இரகசியம்.

-இராக்கர்

 • குடும்பம் நன்றாக வாழ வேண்டுமானால் மனிதர்கள் இயற்கையாக அழுதால் மட்டும் போதாது. செயற்கையாகவாவது சிரிக்கவும் வேண்டும்.

-கண்ணதாசன்

 • கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையெனில் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியாது.

- அறிஞர் அண்ணா

 • தொழில் எவ்வளவு கீழ்த்தரமாக இருந்தாலும் பரவாயில்லை, சோம்பேறியாக இருப்பதுதான் அவமானம்.

 -டால்ஸ்டாய்

 • மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை.

- சாக்ரடீஸ்

 •  சேமிக்க வேண்டிய நேரத்தில் செலவு செய்யாதீர்கள். செலவு செய்ய வேண்டிய நேரத்தில் சிக்கனம் செய்யாதீர்கள்.

-செனாகா

 • பெரும்பாலும் முதல் சிந்தனை தெளிவற்றதாக இருக்கும். எதற்கும் மறுசிந்தனை செய்யுங்கள்.

-ஷேக்ஸ்பியர்

 • ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழிவாங்குவது போலாகும்.

-தேமேச்தனுஸ்

 • கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.

-சிசரோ

 • நீங்கள் புதிதாகத் தெரிந்து கொண்டதை, என்று நிறுத்தத் தொடங்குகிறீர்களோ அன்றே உங்களின் முதுமைப் பருவம் தொடங்கி விடுகிறது.

 -கைபர்ட் கேசன்

 • தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்பவன்தான் உலகிலேயே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி.

- பெர்னாட்சா

 • கள்ளம் கபடமற்ற நாத்திகன் அந்த வழக்கம் நிறைந்த வைதீகனைவிட ஆயிரம் மடங்கு மேலானவன்.

 -விவேகானந்தர்

 • உன்னை உண்மையிலேயே புரிந்து கொண்டிருக்கும் நண்பன்தான் உன்னையே உருவாக்குகின்றான்.

-ரோமின்

 • உங்களை ஒருவர் விமர்சித்தல் எரிச்சல் வருகிறதா? அப்படியெனில் அவ்விமர்சனம் சரியானது.

- டோக்டசு

 • தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடி வெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது.

- ஓவிட்

 • முடிந்தால் சமாதான மாக இரு.ஆனால் என்ன நேர்ந்தாலும் உண்மையை மட்டும் கூறு.

-மார்ட்டின் லுதர்கிங்.

 • இது மனதில் இருக்கட்டும். மனிதன் பயனின்றி அழியக்கூடாது.

-காரல் மார்க்ஸ்

 • மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.

 • -பேர்ல். எஸ். பக்

  தொகுப்பு: தாமரைச்செல்வி.

      முந்தைய பொன்மொழிகள் காண 

   

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.