........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் பைபிள் கருத்துக்கள்!
புத்திசாலியான மகன் தந்தையை மகிழ்விக்கிறான்.
ஆனால், புத்தியில்லாத முட்டாளோ தாய்க்குப் பாரமாயிருக்கிறான்.
பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல
கபடமில்லாமலும் இருங்கள்.
கிழட்டு முட்டாள் ராஜாவாய் இருப்பதை விட,
புத்திசாலியான ஏழைக் குழந்தையாய் இருப்பது சிறந்தது.
அறிவில்லாத மனிதன் கவுரவம் உள்ளவனாய்
இருந்தாலும், அழிந்து போகும் மிருகங்களுக்குச் சமமானவனாயிருக்கிறான்.
விண்ணிலிருந்து வரும் அறிவானது முதலில்
தூய்மையானது. பிறகு அமைதியானது. கண்ணியமானது. இணக்கமுள்ளது. நற்கனிகளும்,
கருணையும் நிறைந்தது. பாரபட்சமோ பாசாங்கோ அதற்கு இல்லை.
ஒருவன் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரைக்
கொடுப்பதை விடப் பெரும் அன்பு எவனிடத்திலும் இல்லை.
பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களைச்
சபிப்பவரை வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
கண்ணீருடன் விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை
செய்வர்.
மனிதன் எதை விதைக்கிறானோ அதன் விளைச்சலையே
அறுவடை செய்வான்.
தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.