........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

a

பொன்மொழிகள்

சும்மா இருந்தாலும்... இருக்க விடுவதில்லை...!

  • எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

- தாகூர்

  • என்றும் நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.

-கார்ல் மார்க்ஸ்

  • செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

-பெர்னாட்ஷா

  • காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்.

-லெனின்

  • பற்றற்றவர்களாக இருங்கள். அதற்காக காட்டுக்குள் சென்று விடாதீர்கள்.

-மாத்யூ கிரீன்

  • மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை.

-மாவோ

  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

-சுவாமி விவேகானந்தர்

  • நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்று கொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

-அடால்ஃப் ஹிட்லர்

  • இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

-ஆலன் ஸ்டிரைக்

  • வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

-பான்னி ப்ளேயர்

  • ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

-லியோ டால்ஸ்டாய்

  • கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

-ஆபிரஹாம் லிங்கன்

  • எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்.

- கெதே

  • உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றி பெறுவாய்.

-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

  • எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

-ஐன்ஸ்டைன்

  • ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

-சார்லஸ்

  • ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.

- காந்திஜி

  • செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது

- சபாகிளிஸ்

தொகுப்பு: தாமரைச்செல்வி.

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.