........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
a |
பொன்மொழிகள் எல்லோரும் யோக்கியர்கள்தான்!
அறிவாளிகளுக்கு அறிவு தான் அதிகம்;
முட்டாள்களுக்குத்தான் அனுபவம் அதிகம்.
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது; பல
நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது.
அறிஞர்கள் அகப்பட்டால் விட மாட்டார்கள்;
திருடர்கள் விட்டால் அகப்பட மாட்டார்கள்.
மனிதர்கள் பெரும் வெற்றிக்கு அவர்களே
காரணம்.தோல்விக்குத்தான் கடவுள் காரணம். இல்லை என்றால் அவர்களா தோல்வி
அடைவார்கள்?
சாதாரண மனிதன் புகழ் பெறத் துவங்கும்போது, அவன்
செய்த தவறுகளும் புகழ் பெறத் தொடங்குகின்றன.
காமம் என்பது எப்போது ஆரம்பமானது? நிர்வாணமாக
இருந்த மனிதன் ஆடை கட்டத் துவங்கிய போது.
கஷ்டமான நேரத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் மரியாதை
வருகிறது.
கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம்
ரூபாயை வேண்டுமானாலும் எழுதலாம். செய்யப் போவதில்லை என்று முடிவு கட்டி விட்டால்
எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன
வேண்டும்?; எந்த விமரிசனத்தையும் தூக்கி எறிய வேண்டும்.
சோழன் காலத்தில் யாரும் மின்சாரத்தைப் பற்றிப்
பேசவில்லை. ஆகவே, மின்சார யுகத்தில் சோழனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில்
அர்த்தமென்ன?
உன் கையிலுள்ள ஒட்டு ஒரு யோக்கியனுக்கு
விழுந்தால், உன் எதிர் காலம் காப்பாற்றப்படும்; ஒரு
அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்.
வெற்றியிலே நிதானம் போகிறது; அதோடு வெற்றியும்
போய் விடுகிறது.
தலைவர்கள் ஜனங்களை ஏமாற்றுவதற்குப் பெயர்
ராஜதந்திரம்; ஜனங்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்குப் பெயர் ஜனநாயகம்.
சருமம் பளபளப்பாக இருந்தால் உடம்பிலே நோய் இல்லை
என்று பொருளல்ல. தட்டிக் கொடுப்பவர்கள் எல்லாம் அன்புள்ளவர்கள் என்றும்
பொருளல்ல.
உலகத்திலுள்ள எல்லோரும் யோக்கியர்களே! எப்போது?
தூங்கும் போது!
இரண்டு பக்கமும் கூர்மையாய் உள்ள கத்தியை
ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்; எந்தப் பக்கமும் சேரக் கூடிய மனிதர்களிடம்
ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.
அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்லும் போது இருக்கும்
தைரியம், தனக்குத் தேவைப்படும் போது அடுத்தவனிடம் போய்விடுகிறது.
பாத்திரத்தின் நிறமல்ல, பாலின் நிறம்;
ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.
விஷ்கியைக் குடித்தவன் தான் ஆட வேண்டும்; விஸ்கி
பாட்டிலே ஆடக்கூடாது. நம்மைப் பிறர் தான் புகழ வேண்டும், நாமே புகழக்கூடாது.
குடித்திருப்பவரோடு விவாதம் செய்தால், உங்களில்
யார் குடித்திருப்பவர் என்பது தெரியாது
-கண்ணதாசன்
தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.