........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

பொன்மொழிகள்

ஜனநாயகத்தின் பொருள் என்ன?

 • பொதுப்பணியில் நாணயமும் நேர்மையும் வேண்டும்.

 • உலகத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று யாராலும் கூற முடியாது.

 • காலம் ஒரு அற்புதமான மாயம் நம் கைக்குள் அகப்படுத்த முடியாத விசித்திரம்.

 • நாடுகளுக்காகட்டும் தனிமனிதனுக்காகட்டும் பயத்தைப் போல் தீமை தருவது வேறில்லை.

 • மொழி ஒரு நாட்டினுடைய தனி மனிதனின் வாழ்வில் முக்கிய அம்சமாகும்.

 • யாருக்கும் தோல்வியில்லாத வெற்றிக்கே சமாதானம் என்று பெயர்.

 • மனிதன் தான் சிந்தனை செய்வதில் உள்ள உயர்ந்த குறிக்கோளால்தான் வளருகின்றன.

 • சாவையும் வெற்றி கொள்ளும் மனித மனத்தின் அஞ்சாமை வியக்கத் தக்கதாகும்.

 • அடக்கம் நல்லதுதான். ஆனால் அது அடிமைத்தனமாக இருக்கக் கூடாது.

 • ஆக்கவேலைக்குப் பயன்படாத அறிவு அழிவையே தரும்.

 • ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத்தன்மை.

 • மாறுபட்ட கருத்துக்களைத் தாங்கிக் கொள்வது உயர்ந்த நாகரீகத்தின் அறிகுறி.

 • ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேற்றமடையும்.

 • ஒரு நாட்டின் வாழ்வு தாழ்வு எல்லாம் அந்நாட்டு இளைஞர்கள் பெறும் கல்வியைப் பொறுத்தது.

- ஜவஹர்லால் நேரு

தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

    முந்தைய பொன்மொழிகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு