|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
a |
|
|
புத்தகப்பார்வை-1
பக்கம்- 256 விலைரூ 75.00 |
எண்ணப் பறவை சிறகடித்து...
-வெ.இன்சுவை-
கவிதா பப்ளிகேஷன், |
|
பார்வை :
சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றும்
வெ.இன்சுவை தன் அன்றாட வாழ்வில் சந்தித்த, மனதைப் பாதித்த சம்பவங்களை அடிப்படையாகக்
கொண்டு சில பத்திரிகைகளில் எழுதிய 44 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த
"எண்ணப்
பறவை சிறகடித்து..."
இந்த கட்டுரைத் தொகுப்பில் "ஒத்துழையுங்கள் ஒதுக்கப்பட மாட்டீர்கள்!" என்ற
தலைப்பில ் மாமியார்களுக்கு
சில கருத்துக்களைத் தெரிவித்து,
"உங்கள் உடலில் சக்தி
இருக்கும் போது அவர்களை ஆட்டி வைத்தால், இளமையைத் தொலைத்து, தள்ளாமையின்
வாயிற்படியில் நிற்கும் போது ஊன்றுகோலாய் அவர்கள் இருக்க மாட்டார்கள்.
உருட்டித் தள்ளி விடுவார்கள். மாமியார்கள் தம்மிடம் உள்ள சிறு சிறு தவறுகளைத்
திருத்திக் கொண்டால், தங்களை மாற்றிக் கொண்டால் உறவுகளில் முடிச்சுகள் விழாது.
மனதினில் கசப்புகள் தோன்றாது."
-என்று அவர்களது கடைசிக் காலத்தையும் எச்சரித்து
அறிவுறுத்துகிறார்.
"சுகமான சுற்றுலா போகலாம் வாங்க!" என்கிற கட்டுரையில்
"வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தால் அது உப்பு சப்பில்லாதது
போலத்தானே இருக்கும்? அந்தக் காலம் போலவா தற்போதைய வாழ்க்கை உள்ளது? காலில்
சக்கரம் கட்டிக் கொண்டது போல் ஒரு ஓட்டம், வேகம். ஆற அமர்ந்து சாப்பிட
நேரமில்லை. கடிகார முள்ளுக்குப் பயந்த வாழ்க்கை. உடம்பும் மனதும் ஓய்ந்து
போகிறது. ஒரு சின்ன மாற்றத்திற்காக ஏங்குகிறது. இயந்திரத்தனமான இந்த
வாழ்க்கையிலிருந்து தற்காலிக விடுதலை பெற மனது பரபரக்கிறது..."
-என்பது போன்ற வாழ்க்கை ஓட்டத்தின்
கஷ்டங்களைச் சொல்லி மனதிற்கு இதமாக, அவ்வப்போது அல்லது ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்றால் நன்றாகயிருக்கும் என்று
புதிய வழியையும் காட்டுகிறார்.
இதேபோல் குடும்ப வாழ்க்கையிலும் "இனி கூட்டணிதான்" என்கிற கட்டுரையில், மனைவி வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்பும் கணவர்கள், வீட்டு வேலைகளில்
மனைவிக்கு மட்டும்தான் முழுப் பொறுப்பு என்பது போல் இருப்பதால் வேலைக்குப்
போகும் பெண்களுக்கான
மன அழுத்தங்களைக் கூறி,
"வாழ்க்கையின் சகல சௌகரியங்களையும் அடைய வேண்டும். குழந்தைகளின் கல்வியை
விலைக்கு வாங்க வேண்டும். நல்ல வரண் வேண்டும். சொந்த
வீடு, வாகனம் வேண்டும்...
இப்படி பல "வேண்டும்"
-கள் வேண்டுமென்றால் மனைவி வேலைக்குப் போக வேண்டும். கணவர்களும் பாரத்தைப்
பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.
-என்று முடித்திருப்பது
நன்றாகயிருக்கிறது.
இதுபோல், "உறவைத் தேடி..." என்கிற
கட்டுரையில்,
"இன்றைய பெண்கள், மணம் முடித்த மறுநாளே
தனிக் குடித்தனம் போய் விட வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். பெற்றோர்களும்
பெண்ணுக்கு வரண் தேடும் போதே, பையனுக்குக்
கூடப் பிறந்த
சகோதரிகள் யாரும் இருக்கக் கூடாது. அப்படியே இருந்தாலும் மணமுடித்துப்
புகுந்த வீடு சென்றிருக்க வேண்டும். தலைப்பையனாக இருந்து குடும்ப
பாரத்தைச்
சுமப்பவராக இருக்கக் கூடாது....இப்படி பல "கூடாதுகள்" .
இப்படி எதிர்பார்த்து
அமையாவிட்டால் உடனே தனிக்குடித்தனம். தனிக்குடித்தன வாழ்க்கையில் இவர்கள் கனவு
கண்ட சந்தோஷத்தை அனுபவிக்கிறார்களா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. குழந்தை
வளர்ப்பில் களைத்துப் போய் விடுகிறார்கள். வயதான மாமனாரையும், மாமியாரையும்
புறந்தள்ளிவிட்டு வந்தவர்கள், குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆயாவை
வேலைக்கு அமர்த்துகிறார்கள். அந்த ஆயாவின் மனம் நோகாமல் நடந்து கொள்கின்றனர்..."
-என்று தனிக் குடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர், உறவுகளில்
கிடைக்கும் பயன்களைச் சொல்லி கூட்டுக் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் ஒரு
ஆதரவு காட்டுகிறார்.
இந்த
கட்டுரைத் தொகுப்பில் பெரும்பாலான விஷயங்கள்
குடும்பத்தில் வரும் சம்பவங்களாகவே இருக்கிறது. இந்த "எண்ணப்
பறவை சிறகடித்து..." பெண்களுக்கான ஒரு வழிகாட்டி, கையேடு என்று கூட
சொல்லலாம். |
|
| முகப்பு | |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.