........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-48
பக்கம்-79 விலை:ரூ.25
|
ரைட் சகோதரர்கள்
கிழக்கு பதிப்பகம் |
பார்வை:
வானத்தில் பறக்க வேண்டும்.
வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. இந்த ஆசைகள்
எத்தனை பேருக்கு நிறைவேறி இருக்கிறது? பலருக்கும் அந்த ஆசைகள் காற்றாகப்
போய்விட்டது. அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. ஏனென்றால் பலரும்
தங்கள் ஆசையைச் செயல்படுத்த, வாழ்க்கையில் முன்னேற்றமடைய, முயற்சிகள்
எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் ரைட் சகோதரர்கள் பறக்க நினைத்தார்கள்.
பறந்தார்கள், பலரையும் பறக்க வைத்து விட்டார்கள். மில்டன் ரைட் தன் குழந்தைகள்
விளையாட வாங்கி வந்த பறக்கும் பொம்மை, அவருடைய குழந்தைகளில் வில்பர் ரைட்
மற்றும் ஆர்வில் ரைட் ஆகிய இருவரிடத்திலும் வானில் பறக்கும் புதிய விசையைக்
கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தோற்றுவிக்க அந்த முயற்சியில் இறங்கினர். அவர்கள்
முயற்சியில் எத்தனையோ தடைகள் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் மாற்றி தங்கள்
ஆர்வத்தை விடாமல் தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டேயிருந்தனர். வாழ்க்கையை ஓட்டத் தேவையான
பணத்திற்கு அவர்கள் பழைய சைக்கிள்களை வாங்கி புதிய சைக்கிள்களாக மாற்றும்
சைக்கிள் மெக்கானிக்குகளாக பணிபுரிந்தாலும் பறக்கும் பொருளை உருவாக்கும்
எண்ணத்திலிருந்து கீழிறங்காமல், கல்யாணம் எதுவும் முடித்துக் கொள்ளாமல் இருந்து
வந்தனர். இவர்களின் எண்ணத்திற்கு உறுதுணையாக இவர்களின் சகோதரி காத்ரீன் ரைட்டும்
திருமணம் செய்து கொள்ளாமல் உதவி வந்தார். கடைசியில் 1908 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பிரான்ஸில் இருக்கும் "வி மென்ஸ்" என்ற இடத்தில்
வில்பர்
ரைட் சகோதரர்கள் தயாரித்த
விமானத்தில் நாற்பத்தைந்து வினாடிகள் வானில்
பறந்து காட்டினார். அதன் பிறகு ரைட் சகோதரர்கள் 1909-ல் ரைட் கம்பெனி என்ற
பெயரில் விமானம் தயாரிக்கும் கம்பெனியைத் துவக்கினர். இக்கம்பெனியில் விமானம்
தயாரிக்க துவக்கத்தில் இருந்து உதவி வந்த சார்லி டைலரைக் கவுரவப்படுத்தும்
விதமாக முக்கியப் பொறுப்பு கொடுத்து அளவுக்கு அதிகமான சம்பளமும் கொடுத்து
வந்தார்கள். இப்போதெல்லாம் காரியம் முடிந்ததா அவனைக் கழற்றிவிடு என்றிருக்கும்
நிலையில் ரைட் சகோதரர்கள் பழசை மறக்காத உத்தமர்கள்தான். இந்த உத்தம சகோதரர்களை ரைட்
சகோதரர்கள் எனும் தலைப்பில் குகன் எழுதியிருக்கிறார். இந்த நூலை
சென்னை, Prodigy வெளியிட்டிருக்கிறது. தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த
நூலைத் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் தங்கள் நூலகங்களுக்கு வாங்கி
ரைட் சகோதரர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.