........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-50
பக்கம்-136 விலை:ரூ.50
|
தேனாள் மானாள் மயிலாள் குயிலாள்
தமிழரசி பதிப்பகம் |
பார்வை:
இப்பொழுதெல்லாம் தமிழ் என்றாலே
பலருக்கும் கசக்கிறது. தங்கள் வாழ்க்கை நடைமுறையில் ஆங்கிலத்தைப்
பயன்படுத்தினால்தான் மதிப்பு என்கிற தவறான கணிப்பும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழில் வெளியாகும் படைப்புகளைப் படிக்கப் பலரும் விரும்புவதில்லை.
அதிலும் தூய தமிழில் வெளியாகும் பல படைப்புகளின் நிலை கேள்விக்குறியாகத்தான்
இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தூய தமிழில் ஒரு புதினம் வெளியாகி
இருக்கிறது. மனித சமுதாயத்தில் ஆண்-பெண்
எனும் இருபாலின இணைப்பு நிகழ்வான திருமணத்திற்கு பல தடைகள் இருக்கின்றன. இந்தத்
தடைகளில் வரதட்சணை என்பது மிகப்பெரும் தடையாக இருக்கிறது. மயில் ராவணன் தன்
நான்கு பெண்களான தேனாள், மானாள், மயிலாள், குயிலாள் ஆகியோருக்கு
இந்தச் செலவுகள் எதுவுமில்லாமல்
திருமணம் நடத்துவேன் என்று உறுதி கொள்கிறார். அவர் நினைத்தபடி அவரது நான்கு
மகள்களுக்கும் திருமணம் நடந்ததா? அந்தத் திருமணத்திற்கு எவ்வளவு இடையூறுகள்
ஏற்படுகிறது போன்றவைகளைத்தான் இந்தக்கதையில்
நூலாசிரியர்
சொல்லியிருக்கிறார். நூலாசிரியர் இந்தக் கதையில்
வரும் அனைத்துப் பெயர்களும் தூய தமிழில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையில்
வரும் அனைத்து உரையாடல்களும் தூய தமிழில் அமைக்கப்பட்டிருக்கிறது. தூய தமிழைப்
பயன்படுத்தி இந்தப் புதினத்தை கலைமுதுமணி சேலம் ஆறுமுகன்
எழுதியிருக்கிறார். இந்த நூலை சேலம், தமிழரசி பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது. இன்று கொச்சையான வார்த்தைகளும், ஆங்கிலக் கலப்பு
வார்த்தைகளும் கலந்து வரும் புதினங்களுக்கிடையில் தூயதமிழில் வெளியாகியிருக்கும்
இந்நூல் உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதுடன் இதுபோன்ற நூல்களுக்கு
தமிழ் மொழி ஆர்வலர்களாவது ஆதரவு தர முன்வர வேண்டும் என்று முத்துக்கமலம்
வலியுறுத்துகிறது.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.