........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை
1 மற்றும்
15 ம் தேதிகளில்
புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...
இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
a |
புத்தகப்பார்வை-51

பக்கம்-136
விலை:ரூ.50
|
இவளுக்கு இன்னொரு முகம்
-சேலம் ஆறுமுகன்
-

பத்மினி பதிப்பகம்
144, வி.எம்.ஆர்.நகர்,
மெய்யனூர்,
சேலம் - 636 004.
|
பார்வை:

முதுமைப் பருவத்துக்குச் சென்று விட்டாலே
தலைமுறை இடைவெளி என்கிற லட்சுமணக்கோடு பெற்றோர் பிள்ளைகளைப் பிரித்து விடுகிறது.
இப்போதெல்லாம் இந்தப் பிரிவு அதிகரித்து வருவதால் முதியவர்களுக்கான
காப்பகங்களும் அதிகரித்து
வருகின்றன. இந்தக் கதையிலும் அப்படித்தான். இரண்டு
மகன்களைப் பெற்ற பெரிய பண்ணாடியான வேலப்பப் பண்ணையார் தனது முதுமைப் பருவத்தை
தனது தோட்டத்தில் அமைக்கப்பட்ட ஒரு தனிமைக் குடிலில் கழித்து வருகிறார்.
இவருடைய முதல் மகன் சிங்காரவேலு சமூக நலனில் அக்கறையுடன் பொதுச்சேவைகளில்
இருந்து வருகிறார். இளையமகன் சின்னராசு ரசிகர் மன்றத்தின் தலைவர் பதவியில்
திரைப்பட நடிகருக்கு பெயரைச் சேர்த்துக் கொண்டிருப்பவர். இவர்களுக்கு தந்தை மீது
பாசம் அதிகமென்றாலும் எழுந்து நடமாட முடியாத தந்தை தனிமையை விரும்பி (விரும்பாமல்)
தனித்து வாழ்ந்து வருகிறார். ஆடு மேய்க்கும் பெண்ணான தாழ்த்தப்பட்ட வகுப்பைச்
சேர்ந்த செம்பா பெரியவருக்கான அனைத்து சேவைகளையும் செய்து வருகிறார்.
இந்த
செம்பாவை சின்னராசு காதலிக்கிறார். இவர்களுக்கிடையில் உருளையன் எனும் பாத்திரம்
செம்பாவை அடைந்துவிடும் நோக்கத்தில் வந்து போகிறது.
ஒரு நாள் பெரிய பண்ணாடி இறந்து போகிறார். அவருடைய கையிலிருந்த தங்கக் காப்பு
காணாமல் போனதுடன் அவர் வாயிலிருந்து விஷம் சாப்பிடதற்கான அறிகுறி தெரிய
காவல்துறைக்குப் புகார் தெரிவிக்கப்படுகிறது.
காவல் துறையினர் விசாரிக்கின்றனர். உருளையன் தங்கக் காப்புக்கு ஆசைப்பட்டு
கொன்றிருப்பானோ? அல்லது ரசிகர்
மன்றச் செலவுக்காக சின்னராசு தங்கக் காப்பைத்
திருடிவிட்டு தந்தையைக் கொன்றிருப்பானோ? என்று காவல்துறை விசாரணை நீள்கிறது.
முடிவில் செம்பாதான் பெரியவர் விருப்பப்படி அரளி விதையை அரைத்துக் கொடுத்துக்
கருணைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து கதை முடிவடைகிறது.
இக்கதையில் முதியவர்கள் கடைசிக் காலங்களில் பாதுகாக்கப்படுவதில்லை என்கிற
வலிமையான கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்த பெண் தன் முதலாளிக்கு விசுவாசம் காட்ட அவருடைய வேண்டுகோளின்படி அரளி
விதை
அரைத்துக் கொடுத்ததாகச் சொல்லப்படுவது பழைய திரைப்படக்
கதைகளில் வரும் முடிவைப்
போல் சாதாரணமாக இருக்கிறது. கதையில் வலுவான விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்க
வேண்டும். மேலும் இந்தக் கதையில் முதியவர்களது கடைசிக்காலப் பிரச்சனைகளுக்கு
மரணம் ஒன்றே முடிவு என்பது போல் சொல்லப்பட்டிருப்பது சரியானதாக இல்லை.
இந்த "இவளுக்கு இன்னொரு முகம்" புதினத்தை கலைமுதுமணி சேலம் ஆறுமுகன்
வழக்கம் போல் தூய தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்தி, தூய தமிழ் நடையில்
எழுதியிருக்கிறார். இந்த நூலை சேலம்,
பத்மினி பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது.
தூய தமிழில் வெளியாகியுள்ள
இந்த புதினத்தைத் தமிழ் பற்றுடைய அனைவரும் வாங்கி ஆதரிக்க வேண்டும்.
-தாமரைச்செல்வி.

முந்தைய புத்தகப்பார்வை காண

|
|
முகப்பு |