........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-52
பக்கம்-152 விலை:ரூ.45
|
ஒரு வரித் தகவல்கள் -தேனி.எஸ்.மாரியப்பன்-
விஜயா பதிப்பகம் |
பார்வை:
அரசு வேலையைப் பெற்று விட்டால்
வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்கிற எண்ணத்தில் அரசுப் பணிகளுக்கு
பலரும் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். இந்த வழிகளில் ஒன்று அரசு நடத்தும்
போட்டித் தேர்வுகளில் வெற்றியைப் பெறுவது. அரசுப் பணிகளுக்கான போட்டித்
தேர்வுகள் பல இருக்கின்றன. இந்தப் போட்டித் தேர்வுகளில் பொது அறிவுத் தேர்வும்
ஒன்றாக இருக்கிறது.
பொது அறிவுச் செய்திகள் என்றால் போட்டித்
தேர்வுகளுக்காக மட்டும்தான் வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி,
மாணவர்களாயிருக்கும் போதே அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை
வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பொது அறிவுச் செய்திகள் போட்டித்
தேர்வுகளில் எளிதில் நம் ஞாபகத்திற்குக் கொண்டு வரமுடியும்.
இந்த பொது அறிவுத் தேர்வுகளுக்கென்று எத்தனையோ
வழிகாட்டி நூல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இவற்றுள் ஒரு வரியில் பல பொது
அறிவுச் செய்திகளை வழங்கினால் என்ன என்கிற நூலாசிரியரின் முயற்சிக்கு புத்தக
வெளியீட்டாளரும் ஒத்துழைத்திருக்கிறார். பல துறைகளிலான ஒரு வரித் தகவல்களாக
மொத்தம் 2000 பொது அறிவுத் தகவல்களை நூலாசிரியர் இந்த நூலில் தொகுத்து
வழங்கியிருக்கிறார். நாம் அறிய வேண்டிய பல தகவல்கள் இந்த நூலில் இடம்
பெற்றிருக்கிறது.
எளிமையான பொது அறிவுச் செய்திகளுடனான
இந்த
"ஒரு வரித் தகவல்கள்" நூலை
தேனி.எஸ்.மாரியப்பன் எழுதியிருக்கிறார்.
கோயம்புத்தூர்
விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. போட்டித்
தேர்வுகளில்
பங்கேற்கவிருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான நூல்.
இந்த நூலை பள்ளிகளில் மாணவர்களுக்கான போட்டியின்
போது பரிசளிக்க அதிக அளவில் வாங்கலாம்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.