........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-53

பக்கம்-78                                         விலை:ரூ.45

 

 

ஸ்ரீ நாராயண தர்மம்

-ஸ்ரீ நாராயண குரு-

தமிழாக்கம்:
P.C.போஸ்
C.நல்லசிவம் M.A., B.L.,

மருத்துவாமலை பப்ளிகேஷன்ஸ்,
சதய பூஜா சங்கம் டிரஸ்ட்,
ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம்,
மருத்துவாமலை,
பொற்றையடி - 629 703
கன்னியாகுமரி மாவட்டம்,
தமிழ்நாடு..
 

பார்வை:

குழந்தையாகப் பிறந்தது முதல் பெரியவர்களாகி இறப்பது முடியவிருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மனிதனும் பல்வேறு நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. இந்த காலக் கட்டத்தில் ஒவ்வொரு நிலையிலும் எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? என்று மனிதன் தான் சார்ந்துள்ள மொழி, மதம், இனம், இடம் என்பது போன்ற  ஏதாவது ஒரு பிரிவின் அடிப்படையில்  தன்னையும் தன்னைச் சுற்றிலுமுள்ள குழுக்களுடன் சேர்ந்து சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வந்தான். இது போன்று உலகில் எத்தனையோ கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடுகளில் ஒன்றாக கேரள மாநிலத்தில் ஈழவ சமுதாயத்தில் பிறந்த சமூகச் சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் கோட்பாடுகள் ஸ்ரீ நாராயண தர்மம் என்கிற பெயரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மனிதன் இப்போது இது போன்ற கோட்பாடுகளை எல்லாம் மறந்து வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறான். வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை விட்டுவிட்டு போராட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சில கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகி வருகிறது. இந்நிலையில் இந்த நாராயண தர்மம் நூல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. இந்நூலில் சிஷ்யர்கள் குருவிடம் மனித வாழ்க்கையின் முக்கியமான சில நிலைகள் குறித்துக் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களுமாகத் தரப்பட்டுள்ளது. இந்து மதம் சார்ந்த இக்கோட்பாடுகள் அனைத்தும் ஸ்ரீ நாராயணகுருவால் வழங்கப்பட்டிருக்கிறது. சமஸ்கிருத மொழியில் செய்யப்பட்ட சுலோகங்களை தமிழ் மொழியில் பத்து அத்தியாயங்களாகத் தந்திருப்பதுடன் அதற்கான தமிழ் விளக்கமும் எளிமையாக இந்நூலில் தரப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி, மருத்துவாமலையில் இருக்கும் ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடத்தின் சதய பூஜா சங்கம் டிரஸ்ட்டின் சார்பில் மருத்துவாமலை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த "ஸ்ரீ நாராயண தர்மம்" நூலை தமிழில் P.C.போஸ் மற்றும் C. நல்லசிவம் ஆகியோர் மொழியாக்கம் செய்திருக்கின்றனர். வாழ்க்கையை வரும் வழியில் எல்லாம் வாழாமல் குறிப்பிட்ட வழியில் வாழ்ந்தால் நல்லது என்கிற எண்ணத்தை அனைவருக்கும் உருவாக்க இதுபோன்ற நூல்களை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.