........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-56
பக்கம்-96 விலை:ரூ.55
|
காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் தேனி.எஸ்.மாரியப்பன்
விஜயா பதிப்பகம், |
பார்வை:
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு
அதன் பின்பு சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதலைமச்சராகவும் பொறுப்பேற்ற
காமராசர்
இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.
அவர் பங்கு வகித்த காங்கிரஸ் கட்சி
அவருக்குப் பிரதமர் பதவி தர முன் வந்த போதும் அந்தப் பதவியை பிறருக்கு விட்டுத்
தந்து பெருமை படைத்தவர். இவர் அக்கட்சியின் அகில இந்தியத் தலைவராகவும்
உயர்ந்ததுடன் தன்னுடைய அரிய செயல்பாடுகளால் அனைத்து மாநில மக்களின்
எண்ணங்கலிலும் உய்ர்ந்து நின்றார். இந்த காமராஜர்
படிப்பில்லாமலிருந்தாலும்
இவரது வாழ்க்கை பிறருக்குப்
படிப்பினையூட்டுவதாக, வாழ்க்கையில் உயர்வதற்கு வழிகாட்டுவதாக
இருக்கிறது. இப்படிப்பட்ட இவரின் வாழ்க்கையில்
நடைபெற்ற அரிய சம்பவங்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூல் "காமராஜர் வாழ்க்கை
வரலாற்றுச் சம்பவங்கள்".
இந்த நூலை
நகைச்சுவை எழுத்தாளர் தேனி.எஸ்.மாரியப்பன் எழுதியிருக்கிறார். இந்த நூலை
கோயம்புத்தூர், விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வாழ்க்கையில் உயர
விரும்புபவர்களுக்கும், வாழ்க்கையில் சாதிக்க விரும்புபவர்களுக்கும் இந்நூலில்
இருக்கும் பல சம்பவங்கள் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்குப் பயனளிக்கும் நூல் இது.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.