........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-57

பக்கம்-80                                        விலை:ரூ.40

 

 

 

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம்.  ம.லெனின்.

வானவில் புத்தகாலயம்,
29/(7/3) 'E' பிளாக், முதல்தளம்,
மேட்லி சாலை,
தி.நகர்,
சென்னை -600 017.
தொலைபேசி: 044 -24342771.
 

பார்வை:

எவ்வளவுதான் உழைத்தாலும் நாம் முன்னேற்றமடைய முடியாமல் இருக்கிறோம். ஒன்றுமே செய்யாமல் சிலர் பெரும் பணக்காரர்களாக உலா வருவதையும் நாம் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எப்படி அவர்களுக்குச் சாத்தியமாகும் விசயங்கள் நமக்கு மட்டும் சாத்தியமில்லாமல் போய் விடுகிறது என்கிற எண்ணம் நம்மில் பலருக்குள்ளும் புகைந்து கொண்டிருக்கிறது. கடும் உழைப்பு சாதிக்க முடியாததை கடுகளவு உழைப்பு சாதித்து விடக் காரணம் என்னவாயிருக்கும்? என்பது போன்ற நம் உள்ளத்தில் குடைந்து கொண்டிருக்கும் பல வினாவிற்கு விடையளிக்கும் விதமாக இந்த "கடுகளவு உழைத்தால் கடலளவு பயன் பெறலாம்" என்கிற நூலை ம.லெனின் எழுதியிருக்கிறார்.

இதழியலில் முதுகலைப்பட்டம் மற்றும் முனைவர் பட்டமும் பெற்ற நூலாசிரியர் வாழ்க்கையில் நாம் எந்த விசயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்? எந்த விசயத்தை விட்டு விட வேண்டும்? எப்படி மாற்றங்களை எல்லாம் செய்து கொள்ள வேண்டும்? அதை ஏன் செய்து கொள்ள வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு வாழ்வில் வெற்றியைத் தொட்ட பலரது அனுபவங்களை எடுத்துக்காட்டி எளிமையாக விளக்கியிருக்கிறார்.

சென்னை, வானவில் புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த நூல் நம் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வழிகாட்டும் ஒரு விளக்காய் உதவுகிறது.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.