........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-58
பக்கம்-176 விலை: குறிப்பில்லை
|
வேதாவின் கவிதைகள். -வேதா. இலங்கா திலகம்-
மணிமேகலை பிரசுரம், |
பார்வை:
ஒரு ஈழத்துத் தமிழ் எழுத்தாளராக மட்டுமில்லாமல்
உலகம் முழுவதும் அறியப்பட்ட மிகக் குறைந்த தமிழ்ப் பெண் கவிஞர்களுள் ஒருவரான
நூலாசிரியர் வேதா இலங்காதிலகம் வாழ்வாதாராம் தேடி இலங்கையிலிருந்து
டென்மார்க் நாட்டிற்குச் சென்று அங்குள்ள பாலர் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப்
பணியாற்றி வருபவர். இவருடைய கவிதைகள் சில வேதாவின் கவிதைகள் என்ற பெயரில்
தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
இந்நூலில்
தளிர்கள் எனும் தலைப்பில் 9 கவிதைகளையும், குடும்ப உறவு எனும் தலைப்பில் 12
கவிதைகளையும், தத்துவம் எனும் தலைப்பில் 4 கவிதைகளையும், உணர்வுகள் எனும்
தலைப்பின் கீழ் 15 கவிதைகளையும், காதல் + ஏக்கம் எனும் தலைப்பில் 7 கவிதைகளையும்,
பெண்மை எனும் தலைப்பில் 8 கவிதைகளையும், ஊர் மணம் எனும் தலைப்பில் 12
கவிதைகளையும், நிகழ்வுகள் என்ற தலைப்பில் 16 கவிதைகளையும், வானொலி எனும்
தலைப்பில் 6 கவிதைகளையும் , இயற்கை எனும் தலைப்பில் 3 கவிதைகளையும், சுகம்
கேட்டல் பிரார்த்தனை எனும் தலைப்பில் 3 கவிதைகளையும், வாழ்த்து - விழா எனும்
தலைப்பில் 7 கவிதைகளையும் அளித்திருக்கிறார். இந்நூலில் மொத்தம் 102 கவிதைகளைத்
தந்திருக்கிறார். இது தவிர கடைசியாக டென்மார்க் ஒல்போ நகர வானொலியில் இவர்
வாசித்த நானும் என் கவிதையும் என்கிற கவிதை தரப்பட்டுள்ளது. இந்நூலில் வாசித்த
கவிதைகளுள்...
நேற்றோடு பொறாமையைக்
இந்நூலிற்கு
பிரான்சிலிருந்து வெளிவரும் ஈழநாடு பாரிஸ் இதழின் முதன்மை ஆசிரியர்
எஸ்.எஸ்.குகநாதன் அறிமுகம் ஒன்றை அளித்திருக்கிறார். இலங்கை
யாழ்ப்பாணத்திலிருக்கும் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் சார்பாக இ. ஜெயராஜ்
இந்நூலிற்கு எட்டு பக்கங்களில் அணிந்துரையை வழங்கியிருக்கிறார்.
சென்னை,
மணிமேகலை பிரசுரம்
வெளியிட்டுள்ள இந்தக்
கவிதை நூல் தமிழ்க் கவிதை ஆர்வலர்களுக்கு மிகவும்
பயனுள்ள ஒரு நூல்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.