........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-59
பக்கம்-188 விலை: ரூபாய் 55
|
உணர்வுப் பூக்கள். -வேதா. இலங்கா திலகம்-
மணிமேகலை பிரசுரம், |
பார்வை:
ஈழத்துப் பெண்
கவிஞர் வேதா இலங்காதிலகம் மற்றும் அவரது கணவர் இலங்காதிலகம்
ஆகியோர் இணைந்து கவிதை நூல் ஒன்றைத் தந்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் ஒருவர்
கதை, கட்டுரை, கவிதை எழுதுகிறார் என்றாலே ஏச்சுக்களும் பேச்சுக்களும் ஏராளமாய்க்
கிடைக்கும். ஆனால் ஒரே வீட்டில் கணவன் மனைவி இருவருமே கவிஞர்களாகவும்,
எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்க்கைப் பயணத்தில் இணைந்த இத்தம்பதியர் எண்ணத்திலும் ஒன்றாய் இருப்பது நம்மை
ஆச்சர்யமடைய வைக்கிறது. இவர்களின் உணர்வுகளை தங்கள் கவிதை நூலான உணர்வுப்
பூக்கள் எனும் தலைப்பில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இந்நூலில்
வேதா இலங்காதிலகம் "பக்திப்பூக்கள்" எனும் தலைப்பில்
2 கவிதைகளையும்,
"பெற்றோர் பாசப்பூக்கள்" எனும் தலைப்பில்
8 கவிதைகளையும்,
"மழலைப் பூக்கள்" எனும் தலைப்பில்
2 கவிதைகளையும்,
"மழலைப் பாடல் பூக்கள்" எனும்
தலைப்பின் கீழ்
3 கவிதைகளையும்,
"இயற்கைப பூக்கள்" எனும் தலைப்பில்
9 கவிதைகளையும்,
"கதம்பப் பூக்கள்" எனும் தலைப்பில்
23 கவிதைகளையும்,
"பெண்மைப் பூக்கள்" எனும் தலைப்பில்
9 கவிதைகளையும்,
"விண்ணேகியோருக்கு" என்ற தலைப்பில்
9 கவிதைகளையும்,
"பொது" எனும்
தலைப்பில் 4 கவிதைகளையும்
கொண்டு மொத்தம் 69 கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது. இவரது கவிதைகளில்
பெரும்பான்மையான கவிதைகள் வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளது. சில இதழ்களில்
பிரசுரமாகியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வேதா இலங்காதிலகத்தின் கணவர் இலங்காதிலகம்
எழுதிய 43 கவிதைகள் பின் பகுதியில் இடம் பெற்றுள்ளன. இவர் எழுதியுள்ள கவிதைகளில்
இத்தனை முகங்களா எனும் தலைப்பிலான
இராவணனுக்குப் பத்து முகங்கள்
-எனும் கவிதை உட்பட பல சுவையான கவிதைகளும்
இருக்கின்றன.
இந்நூலிற்கு
சுவிஸ் நாட்டிலிருக்கும் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான ஏ. ஜே. ஞானேந்திரன்
அணிந்துரையும்,
ஜெர்மனியின் பூவரசு தமிழ் ஏட்டின் ஆசிரியர் இந்து மகேஷ் சிறப்புரையும்
எழுதியிருக்கின்றனர். சென்னை,
மணிமேகலை பிரசுரம்
வெளியிட்டுள்ள இந்தக்
கவிதை நூல் தமிழ்க் கவிதை ஆர்வலர்களுக்கு மிகவும்
சிறப்பான ஒரு நூல்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.