........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-60

பக்கம்-160                                     விலை: குறிப்பிடவில்லை

 

 

 

குழந்தைகள் இளையோர் சிறக்க...

 -வேதா. இலங்கா திலகம்-

மணிமேகலை பிரசுரம்,
தபால் பெட்டி எண்: 1447,
7 (ப.எ.4), தணிகாசலம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை -600 017.
தொலைபேசி: 044 -24342926.
 

பார்வை:

ஈழத்துப் பெண் கவிஞர் வேதா இலங்காதிலகம் வாழ்வாதாரத்திற்காக இலங்கையிலிருந்து டென்மார்க் நாட்டிற்குப் புலம் பெயர்ந்தவர். டென்மார்க் நாட்டில் பாலர் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதனால் குழந்தைகள் குறித்து அதிகமான நூல்களைப் படித்திருக்கிறார். குழந்தைகள் குறித்த செய்திகளை பல ஊடகங்களில் பார்த்திருக்கிறார். டெனிஷ் மொழியில் வெளியான குழந்தைகள் குறித்த பல கட்டுரைகள் அவரது கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன. இந்தக் கட்டுரைகளைத் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்து அளித்தால் என்ன என்கிற எண்ணமும் வந்திருக்கிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் போன்றவைகளைக் கட்டுரைகளாக்கித் தந்திருக்கிறார்.

இந்த நூலின் ஆசிரியர் கவிஞராக இருப்பதால் நூலின் கடைசிப் பகுதியில் குழந்தைகளுக்கான கவிதைகள் பதின்மூன்றைத் தந்திருக்கிறார். மேலும் கட்டுரைகளுக்கிடையில் சில இடங்களில் என் மொழிகள் எனும் தலைப்பிலும் சில கவிதைகள் தரப்பட்டுள்ளன.

இந்நூலுக்கு ஜெர்மனியிலிருந்து வெளிவரும் மண் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியர் வ. சிவராசா அணிந்துரையும், டென்மார்க் நாட்டில் உளவியல் நிபுணராக இருந்து வரும் வி. சிறீகதிர்காமநாதன் என்பவர் சிறப்புரையும் எழுதியுள்ளனர்.

சென்னை, மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூல் குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்ளும் பெற்றோர்களுக்கும், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் சிறப்பான ஒரு நூல்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.