........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-61

பக்கம்-96                                     விலை: ரூ. 60

 

 

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்

 -முனைவர் துரை. மணிகண்டன்-

கௌதம் பதிப்பகம்,
2, சத்யவதி நகர் முதல் தெரு,
பாடி,
சென்னை -600 050.
தொலைபேசி: 94440-86888, 98947-62888.
 

பார்வை:

இணையத்தில் பயணித்து வரும் அனைவரும் தங்களுக்கென்று ஒரு வலைப்பூவை உருவாக்கிக் கொள்கின்றனர். இது தமிழ் ஆர்வலர்களையும் விட்டு வைக்கவில்லை. தமிழிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான வலைப்பூக்கள் வந்துவிட்டன. இந்த வலைப்பூக்கள் என்றால் என்ன? இதன் வகைப்பாடுகள் என்ன? என்று சொல்லி இந்த வகைப்பாடுகளிலிருந்து இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள், பக்தி, ஆன்மீகம் சார்ந்த வலைப்பூக்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலைப்பூக்கள் பொதுவான் வலைப்பூக்கள் எனப் பகுத்து இந்த பகுப்புகளில் சில வலைப்பூக்களை அதற்கேற்ற குறிப்புகளுடன், அதற்கான இணைய முகவரியுடன் நூலாசிரியர் தொகுத்தளித்திருக்கிறார்.

பின்பகுதியில் வலைப்பூவை உருவாக்கும் முறை, எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்தல் போன்ற தகவல்களைத் தெரிவித்து, இந்த வலைப்பூக்களை எல்லாம் ஒரு இடத்தில் திரட்டித் தரும், தமிழ் மணம், திரட்டி.காம், சங்கமம், தமிழ்க்கணிமை, மாற்று, தமிழீழத் திரட்டி, இலங்கை வலைப்பதிவர் திரட்டி, மலேசியத் தமிழ் வலைப்பூத் திரட்டி, பூவாசம் திரட்டி, முத்துக்கமலம் போன்ற இணைய தளங்கள் குறித்த சிறு குறிப்புகளையும் அளித்திருக்கிறார். கடைசியாக வலைப்பூக்களினால் ஏற்படும் நன்மைகள், அதிலுள்ள சிறு குறைகள், அதற்கான தீர்வுகள் போன்றவற்றையும் தெரிவித்திருக்கிறார்.

திருச்சி, லால்குடியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் கவுரவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் நூலாசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் எழுதியுள்ள இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்கிற இந்நூலுக்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை சிறப்புநிலைப் பேராசிரியரான முனைவர் இராதா செல்லப்பன் அணிந்துரை அளித்திருக்கிறார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி) யின் தமிழ்த்துறை பேருரையாளர் முனைவர்.மு.பழனியப்பன் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். சென்னை, கௌதம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் இணையம் வழியாகத் தமிழ் வளர்க்க விரும்புபவர்களுக்கும், வலைப்பூக்கள் உருவாக்க விரும்புபவர்களுக்கும் பயனளிக்கும் சிறப்பான நூல்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.