........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-62
பக்கம்-147 விலை: ரூ. 90 |
பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம். -பேரா. சிட்னி சுதந்திரன்-
பேரா. சிட்னி சுதந்திரன், |
பார்வை:
இந்தியாவிற்குள்
கிறித்துவ சமயம் கொண்டு வரப்பட்ட போது
கேரளா மற்றும் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதியிலிருந்த
மக்கள் அதிகமாக அந்த சமயத்திற்கு மாற்றமாகத் தொடங்கினர். இந்து சமயத்தில்
இருந்த சாதீயக் கொடுமைகள் கிறித்துவ சமயத்திற்கு மாற்றமாகி விட்டால்
நீங்கிவிடும் என்கிற எண்ணத்தில் சாதீயக் கொடுமையில் அவதிப்பட்ட பலர் மதம் (மனம்)
மாற்றமாகினர். குறிப்பாக கேரளா மற்றும் தமிழகக் கடற்கரைப் பகுதியிலிருந்த பரதவ
சமுதாயத்தினரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைப்
போல் ஒடுக்கப்பட்டிருந்த நாடார், ஈழவர் போன்றவர்களும் அதிக அளவில் கிறித்துவ
சமயத்திற்குள் மாற்றமாகினர். இவர்களுக்காக கிறித்துவ சமய வழிபாடுகள் இந்து
சமயத்தின் வழிபாட்டுடன் தொடர்புடையதாக அமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கிறித்தவ சமயத்திற்கான
புனித நூலாகக் கருதப்படும் பைபிள் எனப்படும் வேதாகமம் தமிழில் மொழி
பெயர்க்கப்பட்டது.
தமிழில்
மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்திற்கு முன்பு பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்கிற
வேதாகமத்தின் வரலாறு, இதில் இந்தியாவிற்குள் முதன் முதலாக கி.பி.52 ஆம் ஆண்டில்
இயேசுவி பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான தோமா அப்போஸ்தலர் என்பவர் கேரளாவில்
கிறித்துவின் பெருமைகளைப் பரப்ப வந்து கொலை செய்யப்பட்ட தகவல், இந்தியாவிற்குள்
1510 ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர் வருகை, அதன் பின்பு கிறித்துவ சமய
வினா விடை புத்தகம், 1706 ஆம் ஆண்டில் சீகன்பால்க் வருகை போன்றவை முதல்
பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் இரண்டாம் பகுதியில் தமிழ் வேதாகமம் எனும்
தலைப்பில் அதற்கான மூலப்பிரதிகள், இறைப் பெயர்கள், தமிழில் வேதாகமம்
மொழிபெயர்ப்பு, இம்மொழிபெயர்ப்பில் குறிப்பிடக்கூடிய மொழிபெயர்ப்புகள்,
கடைசியாக உருவாக்கப்பட்ட ஐக்கிய மொழிபெயர்ப்பு மற்றும் இந்த மொழிபெயர்ப்புக்
குழுவில் இருந்த ஹென்றி பவர்,
முத்தையா பிள்ளை, கால்டுவெல், சார்ஜண்ட், வில்லியம் திரேசி, ஸ்கடர், ஸ்போல்டிங்
ஐயர், மைறன் வின்ஸ்லோ ஐயர், பிறதேட்டன் ஐயர், யோவான் கில்னர் ஐயர், கோல்ப் ஐயர்,
இராஜகோபால் போன்றவர்கள் குறித்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
இந்நூலின்
வேதாகம
நூல்களின் அறிமுகம் எனும் மூன்றாம்
பகுதியில் வேதாகம நூல்களின் அனைத்துக் குறிப்புகளும் தொகுக்கப்பட்டு சிறப்பாகத்
தரப்பட்டுள்ளன. இந்நூலிற்கு அருள்திரு டாக்டர் தாமஸ் தங்கராஜ் முன்னுரையும்,
விஞ்ஞானி டாக்டர் தயானந்தன் வாழ்த்துரையும், இலக்கியவாதி முனைவர் பா. வளன் அரசு
அறிமுக உரையும் எழுதியிருப்பது இந்நூலிற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றிய நூலாசிரியர் பேராசிரியர் சிட்னி சுதந்திரன்
கிறித்துவ இறையியல் குறித்த நூலை எழுதியிருப்பதுடன், தன்னுடைய சொந்த முயற்சியில்
இந்நூலைச் சொந்தமாகப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இந்நூல் கிறித்தவ
சமயத்தவர் அனைவரும் வாங்கிப் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய நூல். பிற
சமயத்தவர்கள் வேதாகமம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வாங்கிப் படிக்கலாம்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.