........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-63

பக்கம்-96                                    விலை: ரூ. 50

 

 

ங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?

 -கோ. சந்திரசேகரன்-

கௌதம் பதிப்பகம்,
2, சத்தியவதி நகர் முதல் தெரு,
பாடி,
சென்னை - 600 050.
தொலைபேசி:91-9444986888, 9894762888 www.gowthampathippagam.com.
 

பார்வை:

பங்குச் சந்தை குறித்து தெரிந்து கொள்ள ஓரளவாவது வணிகவியல் அறிவினைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற நிலை முன்பிருந்தது. ஆனால்,  தற்போது சாதாரணமான மக்களே பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களுக்கும் பங்குச் சந்தை குறித்து ஓரளவாவது தெரிந்திருக்கிறது. பங்குச் சந்தை குறித்து பல புத்தகங்கள் தமிழில் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அவை பங்குச் சந்தை குறித்து ஒரு பூதாகரமான எண்ணத்தைக் கொண்டு எழுதப்பட்டதாகவே இருக்கின்றன. விலையிலும் பக்க அளவிலும் அதிகமான அந்தப் புத்தகங்கள் பங்குச் சந்தை வணிகத்தில் ஓரளவு அனுபவம் பெற்றவர்களுக்கு உதவலாம். பங்குச் சந்தை வணிகத்தில் நுழையும் தொடக்கநிலையாளர்களுக்கு உதவக் கூடிய மிக எளிமையான புத்தகம் ஒன்றை சென்னையைச் சேர்ந்த கோ. சந்திரசேகரன் எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை குறித்த அடிப்படைத் தகவல்கள், பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்வது? அதற்கான வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது எப்படி? பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிப்பது எப்படி? என்பது போன்ற பல முக்கியமான தகவல்களை எளிமையான முறையில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களே  புரிந்து கொள்ளும்படி சிறப்பாகத் தரப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் பங்குச் சந்தை குறித்த நிலவரங்களை அறிய உதவும் இணையதளங்கள் குறித்த தகவலும் தரப்பட்டுள்ளன.  

சென்னை, கௌதம் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், பங்குச் சந்தையில் நுழைய விரும்பும் தொடக்கநிலையினருக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய ஒரு நூல்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.