........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-64
பக்கம்-96 விலை: ரூ. 50 |
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம். -கோ. சந்திரசேகரன்-
கௌதம் பதிப்பகம், |
பார்வை:
இன்று இணையத்தில் ஓரளவு கணினி
அறிவுடையவர்கள் தனக்கென்று தனியாக வலைப்பூ (Blogs)
ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இணையத்தில் இலவசமாக அளிக்கப்படும் இந்த
வசதியைப் பயன்படுத்திக் கொள்ளாத இணைய விரும்பிகள் இல்லை எனும் அளவிற்கு இதன்
பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் இந்த வசதியிலிருந்து
மாறுபட்டு தனக்கென தன் விருப்பத்திற்கென இணைய தளங்களை உருவாக்கிக்
கொள்கின்றனர். சிலர் தங்கள் அமைப்பு, நிறுவனத்திற்கென்று தனியாக ஒரு இணைய
தளத்தை உருவாக்கி வருகின்றனர். இவர்களில் சிலர்
சொந்தமாக
இணைய தளம் உருவாக்கும் திறனுடையவர்களாக இருக்கின்றனர். பலர் இணையதள வடிவமைப்பு
நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி தங்களுக்கான இணைய தளத்தை உருவாக்கிக்
கொண்டுள்ளனர். இப்படி பிறர் உதவியை நாடி இணைய தளம் அமைக்கும் பொழுது தங்கள்
விருப்பத்தை அந்த வடிவமைப்பில் காணமுடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதுபோல்
அந்த தளத்தில் ஏதாவது சிறு மாற்றம் செய்ய வேண்டும் நிலையில் செய்ய முடியாமல்
தவிக்கின்றனர்.
இந்நிலையைப் போக்கி நம்முடைய
இணையதளத்தை நாமே வடிவமைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? இதற்கு என்னவெல்லாம்
தேவைப்படும்? இணைய வடிவமைப்புக்கு உதவும் மிகை வாக்கியக் குறிப்பு மொழி (HTML
- Hyper Text Markup Language) எளிதாக உருவாக்குவது எப்படி? இணைய முகவரி பெறுவது
எப்படி? இணைய தளத்திற்குத் தேவையான இடவசதியை எங்கு பெறுவது? என்பது போன்ற
இணையதள உருவாக்கத்திற்கான அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கி எளிமையான
முறையில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் இந்த நூலாசிரியர் கோ.
சந்திரசேகரன்.
சென்னை,
கௌதம் பதிப்பகம் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல்,
சொந்தமாக இணையதளம் உருவாக்க விரும்பும் தொடக்கநிலையினருக்கு
மிகவும் பயனளிக்கக் கூடிய ஒரு நூல்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.