........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
|
|
a |
|
புத்தகப்பார்வை-74
பக்கம்-80 விலை: ரூ. 55 |
அழகியலே.. -பெ. விஜயராஜ்காந்தி-
ஓவியா பதிப்பகம், |
பார்வை:
கவிஞர்களின்
தொடக்கம்
பெரும்பான்மையாகக்
காதலில்தான்
தொடங்கியிருக்கிறது. காதல்வயப்பட்ட பலர் தங்கள் காதல் இணைகளை எப்போதும்
நினைத்துக் கொண்டிருப்பதால் அவர்களை மட்டுமே உலகம் என்று நினைத்துக்
கொள்கிறார்கள். அவர்கள் பார்க்கும் உருவங்களும், கேட்கும் குரல்களும், அவர்கள்
இணைகளாகக் கற்பனை செய்வதாலோ என்னவோ பலரும் கவிஞர்களாகி விடுகின்றனர். இந்தக்
கவிஞர்களின் கற்பனைக்கு எல்லைகளே இல்லை... இதற்கு இந்தக் கவிதை நூலின்
நூலாசிரியரும் விலக்கில்லை... எனக் கருதுகிறேன்.
இந்நூலில் எழுதப்பட்ட
கவிதைகள் அனைத்தும்
இவர் காதல்வயப்பட்ட ஏதோ
ஒரு இணையைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்...?
இந்த நூலிலுள்ள பல கவிதைகள்
தன்னுடைய இணையை ஏதாவது ஒன்றுடன் உவமைப்படுத்தி எழுதப்பட்டதாக இருக்கிறது. சில
கவிதைகள் மட்டும் மாறுபட்டு இருக்கின்றன. இந்தக்
கவிதைகளில் ஒரு கவிதை அனைவரையும் கவருவதாக இருக்கிறது. அந்தக்கவிதை...
ஆளைச் சுற்றக்கூடாது
இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் நண்பர் வித்தகக் கவிஞர் பா.
விஜய், வாழ்த்துரை வழங்கியிருக்கும் மதுரையைச் சேர்ந்த கவிஞர் இரா. இரவி,
அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கவிஞர் சக்திஜோதி ஆகியோரும் இந்தக் கவிதையைக்
குறிப்பிட்டுக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள
கவிதைகள் அனைத்திற்கும் தலைப்புகளில்லாததால் அடையாளமில்லாமல் அவதிப்படுகிறது.
அனைத்துப் பக்கங்களிலும் இடம் பெற்றுள்ள ஒரு பெண்ணின் உருவம் கொண்ட பின்புலம் (Background)
நகலெடுத்தது
போலிருக்கிறது. நூலை வெளியிடும் பதிப்பகத்தினர் இது போன்ற குறைபாடுகளை
முதலிலேயே களைந்து சிறப்பாகச் செய்திருக்க வேண்டும் என்பதையும் இங்கு
சொல்லாமலிருக்க முடியவில்லை.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |