........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-107

வலைப்பூக்கள்-107

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தாம்பத்திய வாழ்வு

இல்லற வாழ்க்கை குறித்துத் தமிழில் பல தகவல்களைக் கொண்டுள்ள வலைப்பூ இது. தாம்பத்யம் குறித்த செய்திகளைக் கொண்ட வேறு சில இணையதளப் பக்கங்களுக்கு இணைப்பும் உள்ளன.

 http://rss-illaram.blogspot.com

தமிழ்த்தொகுப்புகள்

இலக்கியம் குறித்த கட்டுரைகள், சங்ககாலப் பாடல்களும் விளக்கங்களும் கொண்ட கட்டுரைகள், புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் என நல்ல தொகுப்புகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

 http://thoguppukal.wordpress.com

INSPIRED TREASURES

இயற்கையுடன் இணைந்த, பல அறிவியல் தகவல்களைக் கொண்ட கட்டுரைகள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கிறது. பொதுவான வேறு சில தகவல்களும் உள்ளன.

 http://inspired-treasures.blogspot.com

மலேசியத் தமிழ் மணி மன்றம்

மலேசியாவில் செயல்பட்டு வரும் தமிழுக்கான அமைப்பின் வரலாறு மற்றும் அந்த அமைப்பின் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://tamizsemmozi.blogspot.com

 

குறைஒன்றுமில்லை

இல்லத்தரசியான வலைப்பதிவரின் கடந்த கால அனுபவங்கள் மலரும் நினைவுகளாக இங்கு தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. பல தகவல்கள் படிக்கச் சுவையாக உள்ளன..  

   http://echumi.blogspot.com

 

அன்புடன்

தமிழகம் எனும் தலைப்பில் பல செய்திகளும் தமிழகத்து அரசியல்வாதிகள், கிரிக்கெட், உலகில் அவ்வப்போது நடைபெற்ற சில சம்பவங்கள் என பல தகவல்கள் உள்ளன..

http://varmah.blogspot.com

மௌனம் பேசுகிறது

2006 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து வலைப்பதிவரின் கவிதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

http://mounampesugiradhu.wordpress.com

நினைவுகள்....

வலைப்பதிவரின் பல்வேறு கவிதைகள் அதற்கேற்ற நல்ல படங்களுடன் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

 http://anpu-sofi.blogspot.com

 

யோகி...

இந்த வலைப்பூவில் ஸென் கதைகள், சில சினிமா விமர்சனங்கள், வலைப்பதிவருக்குப் பிடித்த சில தகவல்கள் என பதிவு செய்யப்பட்டு வருகிறது.

http://zenmasterosho.blogspot.com

தி.மு.க

தமிழ்நாட்டிலிருக்கும் அரசியல் கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகம் குறித்த செய்திகளைக் கொண்ட வலைப்பூ இது.

http://thimuka.wordpress.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு