விவசாயி ஒருவர் ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார்.
அந்த ஆட்டுக்குட்டி அங்கிருந்து ஒரு நாள் தப்பி ஒடியது.
அது போகும் வழியில், ஒரு குள்ள நரியைச் சந்தித்தது.
அந்தக் குள்ள நரி ஆட்டுக்குட்டியிடம், “எங்கே போகிறாய்?” என்று கேட்டது.
ஆட்டுக்குட்டி, “நரியாரே, என்னை ஒரு விவசாயி வளர்த்தான். எனக்கு அங்கு வாழவேப் பிடிக்கவில்லை. அங்கே ஒரு மோசமான ஆடு இருக்கிறது. அது ரொம்பச் சேட்டைகள் செய்யும். அது செய்யும் சேட்டை களுக்கு என் மீது பழிபோடும். அதனால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விதி விட்ட வழியென்று போய்க் கொண்டிருக்கிறேன்”என்றது.
அதைக் கேட்ட நரி, “எனது நிலையும் இதுதான். கழுகோ, பருந்தோ கோழிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு போய் விட்டால் எப்போதும் என் மீதே பழி சுமத்துகிறார்கள். அதனால் நாம் இருவரும் ஒன்றாக ஓடி விடுவோம்” என்று கூறியது.
குள்ள நரியும் ஆட்டுக்குட்டியும் இணைந்து சென்றன. சிறிது தூரம் சென்றதும் அவை பசியோடிருந்த ஒரு ஓநாயைச் சந்தித்தன.
அந்த ஓநாய் இருவரையும் பார்த்து, “நீங்களிருவரும் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டது.
அதற்கு நரி, “நாங்கள் இருவரும் விதிவிட்ட வழியேப் போகிறோம்” என்றது.
ஓநாய் உடனே “அப்படி என்றால் நாம் மூவருமே ஓன்றாகப் போவோம்” என்றது.
ஆட்டுக்குட்டி, நரி, ஓநாய் மூன்றும் ஒன்றாய் நடந்தன.
ஓநாய் திடீரென ஆட்டுக்குட்டியைப் பார்த்து “என்ன ஆட்டுக்குட்டியே, நீ எனது கம்பளிக் கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டாய்?” என்று கேட்டது.
உடனே குள்ளநரி குறுக்கிட்டு, “ஓநாயே, இது உண்மையிலேயே உனது கோட்தானா?” என்று ஓநாயைக் கேட்டது.
ஓநாய் உடனே, “உறுதியாக இது என்னு டைய கம்பளிக்கோட்டுதான்” என்றது.
“அப்படியானால் உன் கோட்டை எடுத்து கொள்” என்று குள்ள நரி கூறியது.
ஆட்டுக்குட்டி பயத்தில், “இல்லை” என்று கத்தியது. ஆனால், உடனே ஓநாய் ஆட்டுக்குட்டி யைக் கொன்று அதன் தோலை உரித்து எடுத்து விட்டுத் திண்ண ஆரம்பித்தது.
குள்ளநரிக்கும் பங்கு கிடைத்தது.
இதற்குத்தான் சேரிடம் அறிந்து சேர் என்று சொல்கின்றனர்.